Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா சிதறிடுச்சா.. "திமிங்கலத்தை" தட்டிதூக்குதா.. மாஜி செய்த "வேலை".. நெகிழ்ந்த திமுக.. ஆஹா

திமுக விழாவில் அதிமுகவின் கடம்பூர் ராஜு பங்கேற்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் மாஜி ஒருவர் திமுக பக்கம் நெருக்கம் காட்டி வருகிறார்.. இதற்கு என்ன காரணம்? திமுக பக்கம் அவர் சாய போகிறாரா? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி விட்டு வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு பேட்டி தந்திருந்தார்.. வழக்கமாக திமுகவை அதிமுகவினர் விமர்சிப்பது வழக்கம்.

ஆனால், அந்த பேட்டியில், பாஜக, அமமுக, கம்யூனிஸ்ட்கள் என எத்தனை பேரையும் விமர்சித்திருந்தார் கடம்பூர் ராஜு.. அதாவது திமுக கூட்டணியைவிட, திமுகவை சாராத கட்சிகளையே குறி வைத்து பேசியிருந்தார்.

 தினகரன் டீல்

தினகரன் டீல்

குறிப்பாக "காலத்திற்கு ஏற்ப கொள்கையை மாற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள்.. பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தாலும் அவர்களது கொள்கை வேறு, எங்களது கொள்கை வேறு, கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.. நாட்டில் உள்ள நிலைமையை எதிர்த்து போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பதிலாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிற்கு ஜால்ரா அடித்து கொண்டிருக்கிறார்கள். சட்ட மன்ற தேர்தலில் டிடிவி தினகரனால் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

கம்யூனிஸ்ட்கள்

கம்யூனிஸ்ட்கள்

அவர் அவருடைய கட்சியை வளர்க்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலைப்பாடு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும், ஊருக்கு ஊர் நிறம் மாற்றிக் கொள்வார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். தமிழகத்தில் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்று கூறும் வைத்திலிங்கம் அதிமுகவிலேயே இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன் சேர்ந்த கட்சிகளுக்கு திமுக தலைமை வகிக்கும். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு அதிமுக தலைமை வகிக்கும்.‌ பாஜக தலைமையில் கூட்டணி என்ற வார்த்தை உண்மையான அதிமுக தொண்டர்களிடமிருந்து வராது. பாஜக மட்டுமல்ல எந்தக் கட்சி பின்னால் போக வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை" என்று கூறியிருந்தார்.

 முனுசாமி போச்சு

முனுசாமி போச்சு

சிவி சண்முகம் போல, கேபி முனுசாமி போல, பாஜக எதிர்ப்பு மனநிலைமையை கடம்பூர் ராஜுவின் பேட்டி பிரதிபலித்தாலும், திமுகவை அவ்வளவாக கடிந்துகொள்ளாததையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.. கோவில்பட்டியில், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மணி மண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சமீபத்தில் திறந்து வைத்திருந்தார்.. இந்த விழாவில், கடம்பூர் ராஜு கலந்து கொண்டிருந்தார்.. இதுதான் ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

கல்வெட்டு

கல்வெட்டு

ஆளும்கட்சி விழாவில் இவருக்கு என்ன வேலை? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ என்ற அடிப்படையில் கடம்பூர் ராஜு பங்கேற்றதாக தெரிகிறது.. எனினும், அதிமுகவுக்குள் கடுமையான எதிர்ப்புகள் வெடித்து கிளம்பி வருவதாக கூறப்படுகிறது. காரணம், அந்த மணி மண்டப திறப்பு விழா கல்வெட்டில் கடம்பூர் ராஜுவின் பெயரே இல்லையாம்.. கோவில்பட்டி எம்எல்ஏ என்ற முறையிலாவது, பெயரை கல்வெட்டில் சேர்த்திருக்கலாம், இது எம்எல்ஏவை மட்டுமல்லாமல், அந்த எம்எல்ஏவை தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த மக்களையும் சேர்த்து அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டு வருகிறதாம்..

நெருங்கிடுச்சு

நெருங்கிடுச்சு

உண்மையை சொல்லப்போனால், கல்வெட்டில் பெயர் இல்லாததற்கு, கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியிருக்க வேண்டும், விழாவை புறக்கணித்திருக்க வேண்டும்.. ஆனால், இப்படி போய் ஆளும்கட்சியுடன் நெருக்கம் காட்டினால் என்ன அர்த்தம்? கட்சியின் மானம் போகிறது என்று குமுறல்கள் எழுகிறதாம். இதற்கு நடுவில், கடம்பூர் ராஜு, திமுக பக்கம் போக போகிறாரா? என்றும் சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். ஆனால், கட்சி வேறுபாடு பார்க்காமல், இப்படிப்பட்ட நிகழ்வில் கடம்பூர் ராஜு கலந்துகொண்டது பல தரப்பிலும் பாராட்டையே பெற்று வருவதாக சொல்கிறார்கள்..

 வாவ் ப்ளான்

வாவ் ப்ளான்

குறிப்பாக, திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் இது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறதாம்.. உதயநிதி பதவியேற்பு விழாவுக்கு எடப்பாடிக்கு அழைப்பு தந்தும் போகாமல் புறக்கணித்துவிட்டார்.. அத்துடன், உதயநிதிக்கு பதவி தருவதை, கேலியும் கிண்டலுமாக தன் பேட்டியில் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியிருந்தார்.. எடப்பாடியே சற்று அமைதியாக இருந்தாலும், ஜெயக்குமார் முந்திக்கொண்டு வந்து, உதயநிதியை விமர்சித்து வரும்நிலையில், கல்வெட்டில் பெயரே இல்லை என்றாலும்கூட, கடம்பூர் ராஜு திமுக அரசு விழாவில் பங்கேற்றது கட்சிகைளையும் தாண்டி, நாகரீக அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. சபாஷ்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+