யார் அந்த SIR? விசாரிக்கும் மத்திய உளவுத்துறை.. சிபிஐ கைவசம் அண்ணா பல்கலை வழக்கு? திமுக திக்
சென்னை: அண்ணா பல்கலை பாலியல் விவகாரம், சி.பி.ஐ. விசாரணைக்கு மாறவிருக்கிறது என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலை பாலியல் விவகாரம் திமுக அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, யார் அந்த சார் ? என்கிற கேள்வியை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் எழுப்பி வருகின்றன.
சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த Sir? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... கடந்த 1 வாரமாக இந்த பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்.. யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது.

கிட்டத்தட்ட அதிமுகவை இந்த பிரச்சாரம் தூக்கத்தில் இருந்து எழுப்பி உள்ளது. உறங்கிக்கிடந்த அதிமுக தொண்டர்கள் திமிறி எழுந்துள்ளனர். அதிமுகவை லைம் லைட்டிற்கு கொண்டு வந்த இந்த பிரச்சாரம் திமுகவை அப்செட் ஆக்கி உள்ளது.
ஆளுநர் ரவி:
இந்த வார்த்தை தமிழ்நாட்டை தாண்டி தேசிய அளவில் எதிரொலித்தபடி இருக்கிறது. அந்த சாரை கண்டறிய மத்திய உளவுத்துறையிடம் கேட்டுள்ளார் தமிழக கவர்னர் ரவி. இதனால் இந்த விவகாரத்தில் சீரியஸ் காட்டி வருகிறது மத்திய உளவுத்துறை. பல தகவல்கள் ஐ.பி.க்கு கிடைத்திருக்கிறதாம். ஐ.பி.யில் உள்ள தனது நண்பர்கள் மூலம் அந்த தகவல்களை பெற்று வருகிறார் கவர்னர்.
இந்த நிலையில், பாலியல் விவகாரத்தில் நடப்பது குறித்து கடந்த வாரம் மத்திய உள்துறையில் இருந்து கவர்னரிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறது. கவர்னர் என்பதையும் கடந்து பல்கலையின் வேந்தர் என்ற முறையில் அவரும் ரிப்போர்ட் அனுப்ப முடிவு செய்து அது குறித்த ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்காகத்தான் மத்திய உளவுத்துறையிலுள்ள தனது நண்பர்களிடமிருந்து தகவல்கள் பெற்றுள்ளார். அதன்படி, குற்றவாளி ஞானசேகரனை திமுக அரசு பாதுகாப்பது பற்றியும், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சார் என்கிற வார்த்தையின் பின்னணியில் அரசியல் இருப்பதையும் உள்பட நிறைய தகவல்கள் கவர்னருக்கு கிடைத்துள்ளதாம்.
தமிழக கேடர் அதிகாரி:
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவு படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழுவில் உள்ள 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தமிழக கேடர் அதிகாரிகள். அதனால் அவர்களுக்கு மறைமுக அழுத்தம், அரசு தரப்பிலிருந்து கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் பாலியல் விவகாரத்தில் மறைக்கப்படுகிற உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டுமானால் சி.பி.ஐ. விசாரணையால் மட்டுமே முடியும் என்கிற முடிவுக்கு கவர்னர் வந்திருக்கிறாராம்.
அதனால், வேந்தர் என்ற முறையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவும், அதே ரிப்போர்ட்டை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கவும் கவர்னர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்தும் ராஜ்பவன் தகவல்கள் சேகரிக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசுடன் மீண்டும் மோதல் போக்கினை தொடர்ந்துள்ள கவர்னர், திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த, பாலியல் விவகாரத்தை சி.பி.ஐ. க்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த தயங்கமாட்டார் என்கிற பேச்சும் ராஜ்பவன் வட்டாரங்களில் பரவியுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications