"அம்மா -அப்பா கிடையாது".. ஏழ்மையிலும் நேர்மை.. வைர நெக்லஸை உரியவரிடம் தந்த தூய்மை பணியாளரின் பின்னணி
சென்னை: சென்னையில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை மீட்டு அதன் உரிமையாளரிடம் தூய்மை பணியாளர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஏழ்மையிலும் கூட நேர்மையாக செயல்பட்ட அந்த தூய்மை பணியாளர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை விருகம்பாக்கம் பிவி ராஜமண்ணா சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் தேவராஜ். இவரது வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் திடீரென்று மாயமானது. வீட்டில் அனைத்து இடங்களில் தேடியும் நெக்லஸ் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் குப்பையுடன் சேர்த்து நெக்லஸ் விழுந்து இருக்கலாம் என அவர் நினைத்தார். இதையடுத்து அவர் வீட்டில் உள்ள குப்பையை கொட்டும் குப்பை தொட்டியில் வைர நெக்லஸை தேட முயன்றார். இதையடுத்து தூய்மை பணியாளர் அந்தோணி சாமியிடம் உதவி கோரினார்.
அந்தோணி சாமி தான் பணியாற்றும் நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு குப்பை தொட்டியில் நகையை தேடினார். வைர நெக்லஸ் மெல்லியதாக இருந்ததால் பொறுமையாக தேடினார். சுமார் 2 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு காய்ந்து போன மாலைக்கு நடுவே வைர நெக்லஸ் கிடைத்தது. இதையடுத்து அந்த வைர நெக்லஸ் உரிமையாளரான தேவராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் மிஸ்ஸான ரூ.5 லட்சம் வைர நெக்லஸை குப்பை தொட்டியில் தூய்மை பணியாளர் தேடி உரிமையாளரிடம் ஒப்படைத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் அந்தோணி சாமி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அந்தோணி சாமியே கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
என் பெயர் அந்தோணி சாமி. நான் சைதாப்பேட்டையை சேர்ந்தவன். நான் தினமும் காலையில் பின் பாயிண்ட் பார்ப்பேன். வழக்கம்போல் தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்போது ஒருவர் வந்தார். அவர் என்னிடம், ‛‛யப்பா ஒரு உதவி செய்றியா.. வீட்டில் இருந்த நகை மிஸ்ஸாகிவிட்டது. பொண்ணு கல்யாணத்துக்கு வைத்திருந்த நகைப்பா அது'' எனக்கூறி குப்பை தொட்டியில் தேடி தரும்படி கூறினார். இதையடுத்து நான் சூப்பர்வைசரிடம் தகவல் கொடுத்தேன். அவர் வந்தார். அதன்பிறகு குப்பை தொட்டியில் நகையை தேடினேன்.
2 மணிநேரம் தேடியபிறகு அவரிடம் நகையை எடுத்து கொடுத்தேன். நகையை பெற்று கொண்டவர் ‛‛ரொம்ப நன்றிப்பா.. இந்த நகை கிடைக்காது'' என நினைத்தேன் என்று கூறி Thank You கூறினார். நான் இந்த பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் ஆகிறது. நான் பணியாற்றும் கம்பெனியில் இருந்து போனஸ், பிஃஎப், இன்கிரிமென்ட், சம்பளம் தருகிறார்கள். அதன்பிறகு நாம் ஏன் வெளியில் மற்றவர்களை நம்ப வேண்டும். நிம்மதியா இருக்கு. சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு எந்த குறையும் இல்லை. கம்பெனி எல்லா வசதியும் தருகிறது. நான் இஷ்டப்பட்டு இந்த பணியை செய்கிறேன்.
எல்லா தொழிலிலும் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். ஒரு தொழிலில் யாரோ செய்யும் தப்பால் மற்றவர்களுக்கு கெட்டப்பெயர் வருகிறது. எங்கள் தொழிலில் ஒருவர் செய்யும் தவறால் எங்களையும் பாதிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் திருந்த வேண்டும். எனக்கு அப்பா - அம்மா கிடையாது. அக்காள், அண்ணன் இருக்கிறார்கள். அவர்கள் தனியாக இருக்கிறார்கள். நான் இந்த வேலையை நம்பித்தான் இருக்கிறேன். எனக்கு கம்பெனி உபகரணம் முதல் சம்பளம், போனஸ், பிஃஎப், சம்பள உயர்வு தருகிறது. இதனால் நான் கம்பெனிக்கு உண்மையாக இருக்கிறேன். இந்த வேலை தான் இன்று வரை என்னை காப்பாற்றுகிறது. இதனால் இந்த வேலையை காதலிக்கிறேன். இந்த பணியின் மூலம் நேர்மையாக உழைத்து 10 ரூபாய் கிடைத்தாலும் அது போதும் எனக்கு'' என அனைவரையும் கலங்க வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி அப்பா - அம்மா இன்றி ஏழ்மையான சூழலிலும் கூட அடுத்தவர்களின் நகைக்கு ஆசைப்படாமல் அவர் ஒருவர் கேட்டவுடன் குப்பையில் 2 மணிநேரம் தேடி ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை தேடிக்கொடுத்ததன் மூலம் அவர் ஹீரோவாகி உள்ளார். இந்த அந்தோணி சாமி தொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications