சென்னையில் இப்படியொரு கேவலமான பெண்? இனிக்க இனிக்க பேசி ஆடை "உரித்த" சினிமா பெண் ஆடை வடிவமைப்பாளர்
சென்னை: சென்னையில் பெண் சினிமா ஆடை வடிவமைப்பாளர் போக்சோவில் கைதாகியிருக்கிறார்.. என்ன நடந்தது? இவர் எப்படி போலீசில் சிக்கினார்?
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி.. இவரது பெற்றோர், விருகம்பாக்கம் மகளிர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை தந்திருக்கிறார்கள். அந்த புகாரில் உள்ளதாவது:

"11ம் வகுப்பு படித்து வரும் எங்களது மகளுக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பரிசோதனை செய்த டாக்டர்கள், "உங்கள் மகள் பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தனர். எனவே எங்களது மகளை சீரழித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டிருந்தனர்.
விசாரணை: இதையடுத்து போலீசாரும் இந்த புகாரின்பேரில் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.. இதுகுறித்த விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
அதாவது பாதிக்கப்பட்ட சிறுமி, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம்.. அடிக்கடி தன்னுடன் படிக்கும் தோழிகளுடன் அண்ணாநகரில் உள்ள கஃபேவுக்கு சென்று டீ, ஸ்நாக்ஸ் சாப்பிடுவாராம்.. இதே கபேவிற்கு பெருங்களத்தூரை சேர்ந்த பிரதிஷா ஆதிரா என்ற பெண்ணும், தன்னுடைய ஆண் நண்பர்களுடன் வருவாராம். சினிமாவில் காஸ்ட்டியூம் டிசைனராக வேலை பார்த்து வருகிறார் பிரதிஷா..
அண்ணாநகர்: அண்ணாநகரில் உள்ள அந்த குறிப்பிட்ட கஃபேயில், சிறுமியை சந்தித்துள்ளார் பிரதிஷா.. அப்போதுமுதல் சிறுமியுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார்.. இருவருமே செல்போன் நம்பர்களை பரிமாறி கொண்டு, வாட்ஸ்அப்பில் பேசி வந்திருக்கிறார்கள். எப்போதுமே சிறுமியிடம் "உன் அழகுக்கு மட்டும் சினிமாவில் சான்ஸ் கிடைத்தால் பெரிய ஹீரோயினாக வருவாய்" என்று சொல்லி கொண்டேயிருப்பாராம் பிரதிஷா.
இந்நிலையில், கடந்த மே மாதம் 2வது வாரம் சிறுமியை சந்தித்த பிரதிஷா, மே 13ம் தேதி தன்னுடைய பர்த்டே என்பதால், பிறந்த நாள் விழாவுக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். சிறுமியும் கடந்த 13ம் தேதி, பெற்றோரிடம் சென்று, "தன்னுடன் படிக்கும் தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு செல்கிறேன். நாளைதான் வீட்டிற்கு வருவேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்.
சாலிகிராமம்: பிரதிஷாவுக்கு போன் செய்த சிறுமி, எங்கே வர வேண்டும் என்று கேட்கவும், தானே நேரில் வந்து அழைத்து வருவதாக சொல்லிய பிரதிஷா, சாலிகிராமத்தில் ஆன்லைன் மூலம் "ஓஒய்ஓ" என்ற ஆப் மூலம் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் புக் செய்து சிறுமியை அழைத்து சென்றுள்ளார்..
இது என்னுடைய காதலன் என்று சோமேஷ் (எ) சோமசுந்தரம் என்பவரையும், ஆண் நண்பர் என்று வில்லியம்ஸ் என்பவரையும் சிறுமிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் பிரதிஷா.
பிறகு, செல்போனில் பாட்டு போட்டு, காதலன், ஆண் நண்பருடன் பிரதிஷா டான்ஸ் ஆடியிருக்கிறார்.. அப்போது சிறுமியையும் தன்னுடன் டான்ஸ் ஆட வில்லியம்ஸ் கட்டாயப்படுத்தியிருக்கிறார். டான்ஸ் ஆடும்போதே, சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்டிருக்கிறார் வில்லியம்ஸ்.. உடலில் தொட்டு பாலியல் ரீதியாகவும் அந்த சிறுமிக்கு ஆசைகளை தூண்டியிருக்கிறார்...
வில்லியம்ஸ்: இதற்கு பிறகு, சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்ல கிளம்ப முயன்றார்.. ஆனால், பிரதிஷாவை தனியாக அழைத்து சென்ற வில்லியம்ஸ், சிறுமியுடன் இன்றிரவு தனியாக இருக்க வேண்டும் என்று உதவி கேட்டிருக்கிறார். அத்துடன், மயக்க மருந்து கலந்துகொண்டு வந்த ஸ்வீட்டை சிறுமியிடம் தருமாறும் வில்லியம்ஸ் கேட்டுள்ளார். பிரதிஷாவும், மயக்க மருந்து கலந்த இனிப்பை சிறுமியிடம் தந்து, இதை சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு போலாம் என்று கூறியிருக்கிறார்.
சிறுமி அந்த ஸ்வீட்டை சாப்பிட்டதுமே லேசாக மயக்கம் வந்துள்ளது.. உடனே பிரதிஷாவிடம் தனக்கு மயக்கமாக இருப்பதாக சிறுமி கூறினாராம். அதற்கு பிரதிஷா, ஸ்வீட் சாப்பிட்டதால் அப்படியிருக்கும், பெட்ரூமில் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டிற்கு போ என்று சொல்லி உள்ளார்.. பெட்ரூமுக்குள் சிறுமி சென்றதுமே பிரதிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
ஆடைகளை களைந்து: தண்ணீர் எடுத்து வருவதாக சொன்ன பிரதிஷா, வில்லியம்ஸை சிறுமியின் அறைக்குள் அனுப்பி, அந்த ரூம் கதவையும் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டார்... இதற்கு பிறகு மயக்க நிலைமையில் கிடந்த சிறுமியின் ஆடைகளை களைந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் வில்லியம்ஸ்.
மற்றொரு ரூமில் , பிரதிஷாவும், காதலன் சோமேஷுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.. பிறகு, நான் வீட்டிற்கு செல்கிறேன். சிறுமியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பிரதிஷா கிளம்பி சென்றுவிட்டாராம்.
உடல்நிலை: இதற்கு பிறகு, காதலன் சோமேஷ், வில்லியம்ஸ் இருவருமே சிறுமியை அன்றிரவு முழுவதும் பாலியல் தொந்தரவு தந்திருக்கிறார்கள்.. இதனால் சிறுமிக்கு மிகவும் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.. மறுநாள் நடந்ததையெல்லாம் பிரதிஷாவிடம் சொல்லி சிறுமி அழுதாராம்..
அதற்கு பிரதிஷா, "மரியாதையாக வீட்டிற்கு கிளம்பி போ.. இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம், இரவு எடுத்த நிர்வாண வீடியோவையும் வெளியிடுவோம்" என்று மிரட்டியிருக்கிறார்.. இதனால் பயந்துபோன சிறுமி வீட்டிற்கு வந்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.. அத்துடன் கடுமையாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. எழுந்து நடக்கவும் முடியாமல் 2 நாட்களாக அவதிப்பட்டுள்ளார். கடுமையான வயிற்று வலியிலும் துடித்து வந்திருக்கிறார்.
சந்தேகம்: அதற்கு பிறகுதான், சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்கள், வீக்கங்கள் இருப்பதை குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. சிறுமியின் அக்காதான் இதைபற்றி சந்தேகப்பட்டு கேட்டு, விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.. இதற்கு பிறகே சிறுமியை மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.. போலீசிலும் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின்பேரில், சிறுமியை அழைத்து சென்ற, சாலிகிராமம் அப்பார்ட்மென்ட்டிலிருக்கு விரைந்து சென்றார்கள் போலீசார்.. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறுமியை பிரதிஷாவும், காதலனும், ஆண் நண்பரும் சேர்ந்து, புக்கிங் செய்யப்பட்ட அப்பார்ட்மென்ட் ரூமுக்குள் அழைத்து செல்வது பதிவாகியிருந்தது.
தலைமறைவு: இறுதியில், பிரதிஷாஆதிரா, அவரது காதலன் சோமேஷ் மற்றும் ஆண் நண்பர் வில்லியம்ஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், போக்சோ பிரிவுகள் பதிவு செய்யப்பட்டன.. பிரதிஷா, காதலனுடன் கைதாகியிருக்கிறார். முக்கிய குற்றவாளி வில்லியம்ஸ் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம்" என்கிறது போலீஸ் தரப்பு.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications