குதிரையில் யார் பாருங்க.. பெட்ரோல் பங்க் கூட்டத்தால் ஷாக்கான வங்கி ஊழியர்! என்ன கோபால் இது?
சென்னை: பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு இந்தியாவில் நிலவி கொண்டிருக்கிறது.. இப்படியொரு இக்கட்டான சூழலிலும், மாற்று வழியை யோசித்து கடமை தவறாமல் ஆபீஸ் சென்றுள்ளார் ஒரு பேங்க் ஊழியர்.. இந்த மத்திய பிரதேச இளைஞரின் செயல்தான் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் காட்டுத்தீயாக வைரலாகி கொண்டிருக்கிறது.. அது என்ன தெரியுமா?
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் அதன் அண்டை மாவட்டமான தேவாஸில் கடந்த சில நாட்களாகவே எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவி வருகிறது. இதனால் பெட்ரோல் பங்குகளில் காலையிலேயே வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் கியூவில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேவாஸ் நகரின் ராதாகஞ்ச் பகுதியில் வசிக்கும் கோபால் தாக்கூர் என்ற இளைஞர், தனது பைக்கில் பெட்ரோல் போடச் சென்றுள்ளார்.
கைகொடுத்த பாரம்பரிய வண்டி
ஆனால், பெட்ரோல் நிலையத்தில் மைல் கணக்கில் நின்ற வரிசையையும், கட்டுக்கடங்காத கூட்டத்தையும் பார்த்த கோபால் தாக்கூர் அதிர்ச்சியில் உறைந்தார்.. இந்த கியூவில் நின்று, பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்குள் மதியம் மேல ஆகிவிடுமே? எப்படி குறித்த நேரத்திற்கு வேலைக்கு போவது என்று பயந்துபோனார்..
ஒரு தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜென்டாக கோபால் வேலை பார்க்கிறாராம்.. வங்கியில் வேலை என்பதால், எப்போதுமே ஷார்ப் நேரத்திற்கு அலுவலகத்தில் இருக்க வேண்டுமாம்..
இதனால் பெட்ரோல் பங்கில் கூட்டத்தை பார்த்து, உடனடியாக வீட்டிற்குத் திரும்பிய கோபால், தன்னுடைய பைக்கை ஓரம் கட்டினார்.. தன்னிடம் இருந்த குதிரையை உடனடியாக தயார் செய்தார். கச்சிதமான அலுவலக உடையில், கையில் லேப்டாப் பையை மாட்டிக்கொண்டு கம்பீரமாக குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு, வங்கிக்கு கிளம்பினார்.. நகரின் முக்கிய சாலைகள் வழியாக இந்த குதிரையில்தான் கோபால் பயணமானார்.
கோபால் - வைரலாகும் வீடியோ
கோபால் தாக்கூர் குதிரையில் பேங்குக்கு செல்வதைக் கண்ட பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பரபரப்பான சாலைகளில் வாகனங்களுக்கு நடுவே ஒரு வங்கி ஊழியர் குதிரையில் செல்வதை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து கோபால் தாக்கூர் சொல்லும்போது, "பெட்ரோல் நிலையங்களில் இருந்த கூட்டத்தைப் பார்த்தபோது என்னால் குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாது என்று உறுதியாக தெரிந்துவிட்டது.. நேரத்தை மிச்சப்படுத்தவும், எனது தொழில்முறை கடமையை நிறைவேற்றவும், குதிரையைப் பயன்படுத்த முடிவு செய்தேன்" என்கிறார்.
குதிரை வண்டி கோபால்
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நிலையங்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில், ஒரு வங்கியின் பேங்க் ஊழியர், தனது அலுவலகத்திற்கு குதிரையில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து நெட்டிசன்களும் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கோபால் கிட்ட குதிரை இருக்கு? நம்மிடம் அப்படி எதுவும் இல்லையே என்றும் நம்ம ஊரில் குதிரையில் போனாலும், டிராபிக்கில் நிற்க வேண்டியதுதான் என்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications