Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத்குமார் மாறுவேஷத்தில் வந்தாரா? வில்லிவாக்கத்தில் அந்த பொண்ணு யாருங்க? நம்பவே முடியல.. பரபர சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு கொலையை செய்வதற்காக, கொலையாளி மேற்கொண்ட முயற்சிகளையும், திட்டங்களையும் பார்த்து போலீசார் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள்.. என்ன நடந்தது சென்னை வில்லிவாக்கத்தில்?

கடந்த 2 ம்தேதி, சென்னை அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலகம் பக்கத்தில் ஒரு விபத்து நடந்தது.. அன்றைய தினம் விடிகாலை 1.30 மணிக்கு, வேகமாக வந்து கொண்டிருந்த பைக் மீது, கார் மோதியது.. இதில், பைக்கை ஓட்டிவந்த நபர் ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார்.. அந்த நபர் உயிரிழந்ததை பார்த்ததுமே, காரை ஓட்டிக் கொண்டு வந்த 2 பேரும், காரை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

Who is this Sarathkumar and what happened in the Chennai Villivakkam Lovers Accident case issue

விபத்து: இதையடுத்து, இந்த விபத்து குறித்த அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், உயிரிழந்தவர் பெயர் பிரேம்குமார் என்பதும், அயனாவரத்தை சேர்ந்த இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடையை நடத்தி வருபவர் என்றும், மனைவி சன் பிரியா (32), 2 மகள்கள் இருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

வழக்கமாக விடிகாலை நேரங்களில் விபத்துக்கள் நடப்பது இயல்பு என்பதால், இதையும் சாதாரண விபத்து என்று நினைத்தே போலீசார் விசாரித்தனர். ஆனால், விசாரணை நடத்தியபோது, பிரேம்குமாரின் சகோதரி சங்கீதா, திடீரென போலீசில் புகார் ஒன்றை தந்து, அதில் தன்னுடைய சகோதரர் பிரேம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அது தொடர்பாக உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

விசாரணை: இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தினர்.. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.. பிறகு, பிரேம்குமார் மனைவி சன்பிரியாவின் நடத்தையையும் கண்காணித்தவர். அப்போதுதான், சன்பிரியா மீது சந்தேகம் அதிகமாக கவிந்தது. அயனாவரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சன்பிரியாவுக்கு கள்ளக்காதல் இருப்பதும், இந்த கள்ள ஜோடிதான் பிரேம்குமாரை கொன்றது என்பதும் உறுதியானது.

இதையடுத்து, இந்த ஜோடியை போலீசார் கைது செய்து விசாரணையும் மேற்கொண்டனர். மொத்த உண்மையையும் கள்ளஜோடி போலீசில் சொல்லிவிட்டது.

கள்ளக்காதல்: சன் பிரியா, ஹரிகிருஷ்ணன் இவர்களது கள்ளக்காதலுக்கு பிரேம்குமார் தடையாக இருந்தாராம். அதனால்தான், கணவரை போட்டுத்தள்ள சன்பிரியா முடிவு செய்துள்ளார்.. கார் ஏற்றி பிரேம்குமாரை கொல்வது என்று முடிவு செய்யப்பட்டு, இதற்காக 6 லட்சம் ரூபாய், ஹரிகிருஷ்ணனுக்கு சன்பிரியா தந்தாராம்.. நண்பர் சரத்குமாரின் உதவியுடன் பழைய காரை வாங்கி, அந்த காரை ஓட்டி பிரேம்குமாரை கொலை செய்ததும் அம்பலமாகி உள்ளது.

இப்போதைக்கு சன்பிரியா, ஹரிகிருஷ்ணன் இருவரும் கைதாகி உள்ளனர். ஆனால், கார் டிரைவர் சரத்குமார் மாயமாகி உள்ளார்.. எனவே, இவரை பிடிக்க போலீசார் புது முயற்சி ஒன்றை கையில் எடுத்தனர். இதற்காக, கார் டிரைவர் சரத்குமாரிடம், ஹரிகிருஷ்ணனை போனில் பேச வைத்திருக்கிறார்கள்.

சாதாரண விபத்து: ஹரிகிருஷ்ணன் சரத்குமாரிடம்,"யாராவது கண்டுபிடிச்சிடுவாங்களோன்னு எனக்கு பயமாக இருக்கு"என்று பயப்படுவதுபோல பேசினாராம்.

அதற்கு சரத்குமார், "இது ஒரு சாதாரண விபத்து என்று நினைத்துதான் போலீஸ் விசாரித்து கொண்டிருக்கிறது.. முதலில் இதை போலீஸ் கண்டுபிடிக்கட்டும், விபத்து ஏற்படுத்தியது யார் என்றும் கண்டுபிடிக்கட்டும்.. அதுக்குப்பிறகு வக்கீல் வைத்து கேஸ் நடத்தி கொள்ளலாம், பயப்படாம தைரியமா இரு" என்றாராம்.

பரபரப்பு: இதையடுத்து, செல்போன் சிக்னலை வைத்து சரத்குமாரை பிடிக்க போலீசார் முயன்றனர். ஆனால், மீடியாக்களில் வில்லிவாக்கம் விபத்து மிகப்பரபரப்பாக பேசப்படவும், சரத்குமார் திடீரென தன்னுடைய செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம். இதனால், போலீசாருக்கு மீண்டும் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனினும் சரத்குமார் ஆந்திராவில் உள்ளதால் அவரை பிடிக்க சென்னை போலீசார் விரைந்துள்ளனர்.

ஆனால், இந்த கொலையை பக்கவாக ஸ்கெட்சு போட்டு செய்திருக்கிறாராம் சரத்குமார்.. பிரேம்குமாரை கார் ஏற்றி கொல்ல வேண்டும் என்று ஹரிகிருஷ்ணன் சொன்னதுமே, மொத்த பிளானையும் சரத்குமார்தான் போட்டுள்ளார்.

வெப்சைட்: இதற்காகவே, ஆந்திராவில் இருந்து கிளம்பி வந்துள்ளார்.. ஓஎல்எக்ஸ் வெப்சைட்டில் பழைய கார் ஒன்றையும் புக் செய்திருக்கிறார்.. அந்த காரை நேரில் சென்று வாங்கும்போது, சரத்குமார் தலையில் விக் வைத்துக்கொண்டு போனாராம்.. மேலும், கால் உடைந்தது போல, கட்டு போட்டுக் கொண்டாராம்.. கையில் ஒரு குச்சியை வைத்து தாங்கி தாங்கி நடந்து போனாராம்.

இதெல்லாம் எதற்காகவென்றால், ஒருவேளை, கார் ஏற்றி கொன்றதை போலீஸ் கண்டுபிடித்துவிட்டாலோ அல்லது அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் முகம் பதிந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே, தன்னுடைய மொத்த அடையாளத்தையும் சரத்குமார் மறைத்து கொண்டுள்ளார். ஓஎல்எக்ஸ்-ஐ அணுகி போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவும் இப்படி மாறுவேடம் போட்டு சென்றாராம் சரத்குமார். இந்த பிளானையெல்லாம் கேட்டு போலீசார் அரண்டு போய் கிடக்கிறார்கள்.

டாட்டூ: இதனிடையே, கைதான கள்ளக்காதல் ஜோடியிடம் விசாரணை நடக்கிறது.. அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு அலுவலகத்தில் ஹரிகிருஷ்ணன், சன் பிரியா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடக்கிறது. ஹரிகிருஷ்ணனீன் வலது பக்க கழுத்தின் மேல்பகுதியில், காது ஓரத்தில் HSP என்று டாட்டூ குத்தியிருக்கிறாராம்.. H என்றால் ஹரிகிருஷ்ணன்.. SP என்றால் சன் பிரியா என்று போலீசாரிடமும் விளக்கமும் தந்தாராம் ஹரிகிருஷ்ணன்.

விசாரணையின்போது, ஹரிகிருஷ்ணனுக்கு போலீசார் சாப்பாடு தந்தார்களாம். ஆனால், சன் பிரியா சாப்பிடாம நான் எப்படி சாப்பிட முடியும்? என்று சோகமாக சொன்னாராம் ஹரிகிருஷ்ணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+