• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கணவன் + காதலன் + கள்ளக்காதலன்.. கவர்ச்சியில் கவிழ்த்த "அழகி".. ஜாலி டூர் வேற.. கடைசியில்தான் ஹைலைட்டே

மாடல் அழகி ஸ்வாதி கைதாகி உள்ள நிலையில், அவரது பின்னணி தகவல் வெளியாகி உள்ளது
Google Oneindia Tamil News

சென்னை: தொழில் அதிபரை தன் வலையில் விழவைத்து, தங்கக்கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் வாரிசுருட்டிய, மாடல் அழகி சுவாதி பற்றின தகவல்கள் பரபரத்து வருகின்றன.

Recommended Video

  மாடல் நடிகைக்காக தாயின் நகையை தூக்கி கொடுத்த பைனான்சியர்!

  சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர்.. 47 வயதாகிறது.. இவர் ஒரு தொழில் அதிபர்... பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார்.
  இதைதவிர, பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்... இவருக்கு ஒரு மாடல் அழகி மீது சபலம் வந்துள்ளது.. அந்த அழகியின் பெயர் சுவாதி.. 22 வயதாகிறது.

  550 சவரன் + சபலம்.. அழகியிடம் சொக்கி விழுந்த 550 சவரன் + சபலம்.. அழகியிடம் சொக்கி விழுந்த

  "சபலம்"

  சபலம் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டதால், அந்த பெண்ணுக்கு எதையாவது கிப்ட் தர ஆசைப்பட்டார் தொழிலதிபர் சேகர்.. அதற்காக சொந்த வீட்டிலேயே திருடிவிட்டார்.. தன்னுடைய அம்மா, மனைவி, மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மொத்தம் 550 பவுன் நகையை திருடி, சுவாதிக்கு தந்துள்ளார்.. காஸ்ட்லி கார் தந்துள்ளார்.. ரூ.30 லட்சம் பணம் தந்துள்ளார்.. ரூ.10 லட்சத்துக்கு பைக் வாங்கி தந்துள்ளார்.. இறுதியில் இது சம்பந்தமாக, சேகர் குடும்பத்தில் இருந்தே போலீசில் புகார் தரவும், சுவாதியும் சேகரும் கைதாகி ஜெயிலில் உள்ளனர்.

   ப்ளேபாய்

  ப்ளேபாய்

  இருவரையும் கோர்ட் அனுமதி பெற்று, தனித்தனியாக போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது சேகரும், சுவாதி பல்வேறு வாக்குமூலங்களை போலீசில் தந்தனர்.. அதனடிப்படையில் விசாரணை நடந்து தொடர்ந்து நடந்து வருகிறது.. சேகரிடம் பெறப்பட்ட நகைகளை, தன்னுடைய காதலன் ஜெரீனிடம் தந்துள்ளதாக சுவாதி தெரிவித்திருந்த நிலையில், ஜெரீன் வீட்டில் நுழைந்த போலீசார் 100 சவரன் நகைகளை மட்டுமே கைப்பற்றி உள்ளனர்.. ஆனால், ஜெரீன் தலைமறைவாகி உள்ளதால், அவரை தேடி வருகிறார்கள்.. இந்த ஜெரீன் ஒரு பிளேபாய் என்கிறார்கள்..

   பிஸ்கட்டுகள்

  பிஸ்கட்டுகள்

  இதனிடையே, சுவாதியின் குடும்ப பின்னணி என்ன என்பது குறித்தும் போலீசார் தோண்டி துருவி வெளியே கொண்டு வந்துள்ளனர்.. அவைகளின் தொகுப்புதான் இவை: சேகர் தன்னுடைய வீட்டில் இருந்து மனைவியின் நகைகள், அம்மாவின் நகைகளை திருடி உள்ளார்.. அத்துடன், தம்பி மனைவியின் நகைகளையும் ஆட்டைய போட்டுள்ளார்.. தம்பி மனைவியின் 300 சவரன் தங்க நகைகளையும், அம்மாவின் 200 சவரன் தங்க நகைகளையும், 100 கிராம் எடையுள்ள 7 தங்கக் கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் சேகர் திருடி, சுவாதியிடம் கொடுத்துவிட்டார் என்பதுதான் புகாராகவே போலீசுக்கு போயுள்ளது..

   கோல்ட் பிஸ்கட்

  கோல்ட் பிஸ்கட்

  ஆனால், ஜெரீன் வீட்டில் தங்க நகைகளை பறிமுதல் செய்ய முடியவில்லையாம்.. 7 தங்கக்கட்டிகளில் ஒன்றுகூட அங்கு இல்லை என்கிறார்கள். சுவாதி தன்னுடைய வாக்குமூலத்தில் சொன்னபோது, "என்னுடன் நெருங்கி பழகியதற்காக நகைகள், தங்கக்கட்டிகள், பணத்தை சேகர் கொடுத்தார்... ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை சேகரின் குடும்பத்தினரே என்னை மிரட்டி வாங்கிக் கொண்டனர்... மீதமுள்ள தங்க நகைகளையும், பணத்தையும், காதலன் ஜெரீனிடம் தந்தேன்..

   ஜாலி டூர்

  ஜாலி டூர்

  அதற்கு பிறகு, சேகர் தந்த லட்சக்கணக்கான பணத்தில், நானும் ஜெரீனும், மாலத்தீவு, கோவா என்று ஜாலி டூர் சென்றோம்.. அப்போது கொஞ்சம் பணம் செலவாகிவிட்டது.. சேகர் தந்த பைக்கில், ஊர் சுற்றி வந்தோம்.. ஆனால், நகை எதுவும் என்னிடம் இல்லை.. ஜெரீனிடம் உள்ளது என்றார். சுவாதியின் குடும்ப பின்னணியை பொறுத்தவரை, இவர் அப்பா ஒரு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.. அம்மா, குடும்ப தலைவியாக இருக்கிறார்.. சுவாதிக்கு ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர்... அவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள்..

   கணவன் + காதலன் + கள்ளக்காதலன்

  கணவன் + காதலன் + கள்ளக்காதலன்

  இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. இவ்வளவு அட்டூழியம் செய்த 22 வயதான சுவாதிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.. சுவாதியின் கணவர், தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.. இவர்கள் குடும்பமமாக ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஆக, கணவன் + காதலன் + கள்ளக்காதலன்.. என சுவாதியின் சொகுசு வாழ்வு நகர்ந்து வந்துள்ளது போலும்.. "பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லைதானே"..!

  English summary
  Who is this Swathi and Model girl confessed to the chennai police about 550 Soveriengs Jewelry மாடல் அழகி ஸ்வாதி கைதாகி உள்ள நிலையில், அவரது பின்னணி தகவல் வெளியாகி உள்ளது
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X