சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒலிம்பியாட்டே அஞ்சும் தமிழர்! யாருங்க இந்த குட்டிப்பையன் குகேஷ்? இவருக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் தமிழ்நாடு வீரர் குகேஷ் டி சிறப்பாக ஆடி வருகிறார். இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்று அசத்தி இருக்கிறார். இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த தொடரில் புதிய சாதனை ஒன்றை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர் சிறப்பாக ஆடி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக நாடுகள் ஆடும் இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த தொடரில் வரிசையாக வெற்றிகளை குவித்து வந்த இந்திய பி ஆண்கள் அணி நேற்று வெற்றிபெற்றது. 6 சுற்றுகளில் வரிசையாக 5 சுற்றுகளில் வென்ற ஆண்கள் பி அணி நேற்று முதல் தோல்வியை சந்தித்தது.

நேற்று இந்திய ஆண்கள் அணி ஏ டிரா செய்தது. இந்திய ஆண்கள் சி அணி வெற்றிபெற்றது. இந்திய பெண்கள் ஏ மற்றும் சி அணி நேற்று வென்றது. பெண்கள் பி அணி நேற்று டிரா செய்தது.

வாவ்.. வியப்பா இருக்கு! மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து அசந்து போன வெளிநாட்டு செஸ் வீரர்கள்! வாவ்.. வியப்பா இருக்கு! மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து அசந்து போன வெளிநாட்டு செஸ் வீரர்கள்!

 எப்படி

எப்படி


இந்த தொடரில் இந்திய பி ஆண்கள் அணியுடன் கவனமாக இருக்க வேண்டும் என்று நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் முன்பே எச்சரித்து இருந்தார். அதன்படியே வரிசையாக பி ஆண்கள் அணி வரிசையாக வென்றுள்ளது. இந்த தொடரில் பி அணியில் இருந்த பிரக்ஞானந்தாவைதான் பலரும் கவனித்து வந்தனர். அவர் 5வது போட்டியில் தோல்வியை தழுவினார். ஆனால் இன்னொரு தமிழரான குகேஷ் டி தொடர்ந்து இந்த தொடரில் வெற்றிகள் குவித்து வருகிறார்.

 சாதனை

சாதனை

நேற்று இந்திய ஆண்கள் பி அணியில் வென்ற ஒரே வீரர் இவர்தான். இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் குகேஷ் டி ஆடி இருக்கிறார். அனைத்து போட்டியிலும் வென்று தனிப்பட்ட வகையில் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவில் இதனால் இவரின் புள்ளிகள் உயர்ந்து இந்தியாவில் செஸ் வீரர்கள் ரேங்கில் விசுவநாதன் ஆனந்த், ஹரி ஆகியோருக்கு அடுத்த 3வது இடத்தில் இருக்கிறார். அதோடு சர்வதேச அளவில் 26வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். குகேஷ் டி 2719 புள்ளிகளை கொண்டுள்ளார்.

தொடர்

தொடர்

இந்த தொடரில் மட்டும் இவர் தனியாக 3296 புள்ளிகளை பெற்றுள்ளார். இதுவரை ஒலிம்பியாட் தொடர்களில் யாரும் இவ்வளவு புள்ளிகளை பெற்றது இல்லை. இந்த தொடர் முடியும் போது இதுவரை ஒலிம்பியாட்டில் பெறாத ரெக்கார்ட் புள்ளிகளுடன் குகேஷ் டி தொடரை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 போட்டியில் ஆடி ஆறிலும் வெற்றிபெறுவது எல்லாம் அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. சர்வதேச வீரர்கள் தற்போது குகேஷ் டியை கவனிக்க தொடங்கி உள்ளனர்.

வயது

வயது

குகேஷ் டிக்கு 16 வயதுதான் ஆகிறது. 13 வயதில் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அண்டர் 9 ஆசிய சாம்பியன்ஷிப், அண்டர் 12 உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் இவர் இதற்கு முன் சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார். அதோடு ஆசிய செஸ் தொடர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சர்வதேச அளவில் இவர் 5 தங்கங்களை வாங்கி உள்ளார். நேற்று இந்திய பி அணி வீரர்கள் யாரும் வெற்றிபெறாத நிலையில் இவர் மட்டும் வென்றார். ஆர்மீனியா வீரர் சர்கிஷியனை இவர் வீழ்த்தினார்.

Recommended Video

    chess Olympiad: பிரக்ஞானந்தா அணி தோற்றது எப்படி? *chess
    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    41வது நகர்த்தலில் சார்கிஷியனை வீழ்த்தி இவர் வென்றார். இந்த நிலையில் குகேஷை பலர் நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்புபடுத்தி குழம்பி வருகிறார்கள். நெட்டிசன்கள் பலர் இவருக்கும் ரஜினிகாந்திற்கு தொடர்பு உள்ளதாக கூறி வருகின்றனர். குகேஷ் ரஜினிகாந்திற்கு சொந்தம் இல்லை. ஆனால் இவரின் அப்பா பெயர் ரஜினிகாந்த். அவர் மருத்துவராக இருக்கிறார். இந்த பெயர் ஒற்றுமை காரணமாக வட மாநில நெட்டிசன்கள் பலர் குழம்பி வருகின்றனர்.

    English summary
    Who is this Tamil Nadu player Gukesh D playing splendid in Chennai Chess Olympiad 2022? சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் தமிழ்நாடு வீரர் குகேஷ் டி சிறப்பாக ஆடி வருகிறார். இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்று அசத்தி இருக்கிறார். இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த தொடரில் புதிய சாதனை ஒன்றை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X