ரோடு னுகூட பார்க்கல.. வேஷ்டியை கழட்டிவீசிய அதிமுக "தலை".. யாரு பக்கத்துல பாஜகவா? விழித்த விழுப்புரம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி முடிவு இதுவரை வெளியாகாத நிலையில், அக்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. என்ன நடந்தது விழுப்புரத்தில்?
மெகா கூட்டணியை அமைக்க போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து 2 வருடமாகிறது.. ஆனால், இதுவரை மெகா கூட்டணிக்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை. பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டால், இஸ்லாமிய அமைப்புகள் பெரிய அளவில் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் வரவில்லை.

அதிமுக கூட்டணி: பாஜக அல்லாத கூட்டணி என்றால், திமுகவிலுள்ள கட்சிகள், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயலலாம் என்று கணக்கு போடப்பட்டது. அப்படி யாருமே அதிமுக பக்கம் வரவில்லை. ஏற்கனவே கூட்டணி வைத்த சிறிய சிறிய கட்சிகள், ஆதரவை தந்துவிடும் என்று நம்பப்பட்டது. அப்படி எதுவுமே சிறிய கட்சிகள் கூட அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டவில்லை..
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக குழு தலைமை அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் யாரும் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.. "கூட்டணிக்காக கடை போட்டு ஐஸ் விற்பது கேவலம்" என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
டிடிவி தினகரன்: "தகுதியில்லாதவன் கையில் கட்சியும், பதவியும் உள்ளது. இலவு காத்தகிளிபோல் அதிமுக உள்ளது" என்று அமமுக தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பரபரப்பு கிளம்பியது. ஆக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பினர் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கும் நிலையில், அதிமுகவை விமர்சிப்பதும், பதிலுக்கு அதிமுக இவர்களை விமர்சிப்பதும் தொடர்கிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு, போன்றவைகளை அதிமுக முன்னெடுத்து வருகிறது என்றாலும், இதுவரை யாருமே கூட்டணி வைக்க முன்வராத நிலையில், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவித சோர்ந்து சோர்வுக்கு ஆளாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில், திடீரென ஒரு சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது,
முத்துக்குமரன்: ஏமப்பூரை சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி முத்துகுமரன்.. இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் பேசியிருக்கிறார்.. "நான் ஏமப்பூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கிறேன்.. அதிமுகவில் கிளை கழக துணை செயலாளராக இருக்கிறேன். அதிமுகவை எனக்கு பிடிக்கல.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சரியாக செயல்படல.. எடப்பாடி பழனிசாமி சரியில்லைங்க. அதனால அந்த கட்சியிலிருந்தே விலகுகிறேன்
அதனால அதிமுக வேட்டிய கழட்டிட்டு பிஜேபி வேட்டியை கட்டுறேன்.. பாஜகவின் மாவட்ட செயலாளரின் செயல்பாடு நல்லா இருக்கிறது. அவர் தலைமையில் சேர்வதற்கு பெருமைப்படுகிறேன். பாஜக வாழ்க.. பாரத் மாதாகீ ஜே" என்று சொல்லிக்கொண்டே, நடுரோட்டிலேயே அதிமுக கரைவேட்டியை அவிழ்த்துவிட்டார் முத்துகுமரன்.
கரைவேட்டி: கரைவேட்டியை அவிழ்த்த கையோடு, பாஜவில் மாவட்ட துணை தலைவர் வேலு முன்னிலையிலும் இணைந்துவிட்டார். முத்துக்குமாரனை தொடர்ந்து, அவருடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் பலர், அதிமுக கரைவேட்டியை அவிழ்த்து வீசிவிட்டு பாஜவில் இணைந்துவிட்டனர். இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது..
சமீபத்தில் அதிமுகவின் மாஜிக்கள் பாஜகவில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதிமுகவில் செயல்படாதவர்கள் எந்தக் கட்சியிலும் இணையலாம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளே கருத்து கூறியிருந்தனர்.
பரபரப்பு: இப்படிப்பட்ட சூழலில்தான், குமரகுருவின் கட்சி தாவல் நடந்துள்ளது. விழுப்புரத்தில் தற்போது அதிமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் குமரகுரு.. இவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
சில மாதங்களுக்கு முன்புவரை, தொடர் சறுக்கலையும், பல நீதிமன்ற உத்தரவுகளால் பின்னடைவுகளையும் ஓபிஎஸ் சந்தித்து வந்தார். எனவே, நொந்துபோன ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் எடப்பாடி பக்கம் தாவினார்கள். தற்போது, எடப்பாடி பழனிசாமியிடமிருந்து, பாஜகவுக்கு நிர்வாகிகள் தாவி வருவது அதிமுக கூடாரத்தையே கிலியை தந்து கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications