பொன்முடியின் வலதுகரம்.. திமுக கிளைச்செயலாளர் டூ விக்கிரவாண்டி எம்எல்ஏ.. யார் இந்த புகழேந்தி?
சென்னை: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ நா புகழேந்தி இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 50 ஆண்டுகாலமாக திமுகவின் தீவிர விசுவாசியாக இருந்த புகழேந்தி யார்? அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை இங்கு காணலாம்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவான புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற புகழேந்தி மயக்கம் ஏற்படவே முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கல்லீரல் புற்று நோய் பாதிப்பு புகழேந்திக்கு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். புகழேந்தி மரணம் திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகாலமாக திமுகவின் தீவிர விசுவாசியாக இருந்த புகழேந்தி யார்? அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை காணலாம்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்: திமுகவின் மூத்த நிர்வாகியான புகழேந்தி கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 71 வயதான புகழேந்தி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் அத்தியூர் ஆகும். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த புகழேந்தி கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 1973-ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 - 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996 ல் ஒன்றிய சேர்மனாக இருந்தார்.
இடைத்தேர்தலில் தோல்வி: கடந்த 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார். எனினும், 2021 சட்டமன்ற தேர்தலின் போதும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அனைவரிடம் பழகும் தன்மை: இதில் புகழேந்தி 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதியில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவராக விளங்கினார். அனைவரிடம் எளிய முறையில் பழகும் தன்மை கொண்ட புகழேந்தியின் மரணம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்முடியின் வலது கரம்: பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களாக செஞ்சி ராமச்சந்திரன், ஏஜி சம்பத் போன்றவர்கள் திமுக-வின் விழுப்புரம் மாவட்டத் தலைவர்களாக இருந்த காலத்தைக் கூறலாம். அத்தகைய தருணங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பொன்முடிக்கு ஆதரவாக இருந்தனர். அதில் ஒருவராக நா புகழேந்தி இருந்தார். பொன்முடியின் தீவிர விசுவாசியாக புகழேந்தி விளங்கி வந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications