தமிழகத்தை உலுக்கிய விஜய் போஸ்டர் ஒட்டியது யார்? புஸ்ஸி ஆனந்த் திடுக்கிடும் தகவல்
சென்னை: மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்று மதுரையில் விஜய் போஸ்டர் ஒன்று நாளிதழ் வடிவில் ஒட்டப்பட்டிருந்தது.இந்த போஸ்டர் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து புஸ்ஸி ஆனந்த் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படததில் நடித்து முடித்துள்ளார்.அந்த படம் ஆயுத பூஜை வார விடுமுறையை முன்னிட்டு வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக பல நாட்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனை விஜய்யும் மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தை ஐடி விங், மகளிரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி என ஒவ்வாரு பிரிவாக பலப்படுத்தி வருகிறார்.

கிட்டத்தட்ட ஒரு அரசியல் இயக்கம் போலவே தான் விஜய் தனது மக்கள் இயக்கத்தை நடத்திவருகிறார். வரும் 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளில் எந்த கட்சியை ஆதரிப்பார் என்பது தெரியவில்லை. இதனிடையே பாஜக அவரது ஆதரவை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லையாம்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அடிக்கடி விஜய்யை அரசியல் ரீதியாக வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைப்பது வழக்கம். அந்த வகையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில்,2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது....மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து...தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது. கூட்டணி கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி'' என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த போஸ்டரை மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி மக்கள் இயக்கத்தினர் ஒட்டியிருப்பதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர், விஜய் ரசிர்களை தாண்டி, அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விஜய், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது. ஏனெனில் முன்னதாக பிரபல தமிழ் நாளிதழில் இரண்டு அரசியல் கட்சிகளுடன் விஜய்யை தொடர்புபடுத்தி கடந்த அக்டோபர் 9ம் தேதி தான் செய்தி வெளியாகி இருந்தது.இந்த செய்தியை அறமற்ற பொய் செய்தி என்றும், உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி என்றும் விஜய் மக்கள் இயகத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே அடுத்ததாக மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்று மதுரையில் விஜய் ரசிகர்களின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதனை கடுமையாக கண்டித்துள்ள புஸ்ஸி ஆனந்த், ஞநடிகர் விஜய் சம்பந்தமாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பட் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
ரூ.150 க்கு எடிட் செய்து பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ள புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய்யயின் பெயர்க்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி மக்கள் இயக்கத்தினர் என்ற பெயரில் ஒரு பொறுப்பே இயக்கத்தில் இல்லை என்றும் இதற்கும் மக்கள் இயக்கத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும் கூறினார்.
-
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications