யார் என்ன சொன்னா என்ன? இத மட்டும் செய்யுங்க! விஜய் மக்கள் இயக்க ஐடி விங்க்கிற்கு பறந்த பரபர உத்தரவு
சென்னை: சென்னையில் இன்று நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங்க் அணியுடன் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து ஐடி விங்க் அணி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் சில முக்கிய உத்தரவுகள் அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடிகர்களுக்கும், அரசியல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த வகையில் தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் சட்டசபை தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் மதிப்பெண்ணில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டின உதவித்தொகை வழங்கினார். இந்த வேளையில் ‛பணம் வாங்கி கொண்டு மக்கள் ஓட்டுப்போட கூடாது. உங்கள் குடும்பத்தினரையும் ஓட்டு பணம் வாங்க விடக்கூடாது' என அவர் அட்வைஸ் கூறினார்.
மேலும் அம்பேத்கர், காமராஜர், பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் கூறினார். இந்த பேச்சு என்பது அவரது அரசியலில் நுழைவதற்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் அணி உள்பட பல்வேறு பிரிவு அணிகளுடன் தீவிரமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஐடி விங்க் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் உள்ள பல்வேறு அணிகளின் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 30,000 நிர்வாகிகள் நியமிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களை பெரிய அளவில் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வலைதளங்களை அனைவரும் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். தமிழக மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்துக்குமான தொடர்பை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது'' என்பன உள்பட பல்வேறு விஷயங்களை எடுத்து கூறினார்.
மேலும் ஐடி விங்க் அணி ஆலோசனை கூட்டம் குறித்து புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இதற்கு முன்பு ஐடி விங்க் ஆலோசனை கூட்டம் நடந்தது. அது மாவட்ட வாரியாக நடந்தது. இப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூறினோம். விஜய் கூறியதுபோல் வலைதளத்தில் யார் நம்மை பற்றி பேசினாலும் நாகரீகமாக பேச வேண்டும். இழிவுப்படுத்தியும், அனாவசியமாகவும் பேசக்கூடாது என கூறினோம்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ட்விட்டர் பேஸபுக், இன்ஸ்டாவில் நாகரீகமாக பதில் கொடுக்க வேண்டும் என விஜய் கூறினார். அதனை எடுத்து கூறியுள்ளனே். மேலும் யார் எனன வேண்டுமானலும் கூறட்டும். நாம் இயக்க பணிகளை மட்டுமே மக்களிடம் அனுப்ப வேண்டு்ம என தெரிவித்தோம். மேலும் நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது'' என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications