"அவரை எதிர்த்துதான் என் அரசியல்".. தொண்டர்களுக்கு மெசேஜ் அனுப்பிய விஜய்? கச்சேரி ஆரம்பிச்சிடுச்சு
சென்னை: தமிழ்நாட்டில் யாரை எதிர்த்து தான் அரசியல் செய்ய போகிறேன்.. அரசியல் ரீதியாக யாரை எதிர்க்க போகிறேன் என்று விஜய் சொல்லாமல் சொல்லி இருக்கிறாராம். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்றை விஜய் அனுப்பி உள்ளாராம்.
சமீபத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் கொண்டாடினார். இதற்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்ட விஜய், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும். சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருக்கெல்லாம் நன்றி?: குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன்,
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய திரு. டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. கமல்ஹாசன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. கு. செல்வப்பெருந்தகை.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர். மதிப்பிற்குரிய திரு. கே. அண்ணாமலை. முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. எஸ். திருநாவுக்கரசர். முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திரு. எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. சி.விஜயபாஸ்கர்.
சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திரு. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திருமதி. தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திரு. ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள். நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன், என்று குறிப்பிட்டு உள்ளார் விஜய்.
சைலன்ட் மெசேஜ்: இதன் மூலம் தன்னுடைய அரசியல் ஸ்டாலின் அல்லது திமுகவிற்கு எதிரானது என்பதை விஜய் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். அதாவது திமுகதான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை. அதேபோல் திமுகவினர் பெயரை விஜய் தனது அறிக்கையில் கூறவில்லை.
இதன் மூலம் சைலண்ட்டாக தன்னுடைய மெசேஜை விஜய் இதன் மூலம் சொல்லிவிட்டார். யாரை எதிர்த்து தன்னுடைய அரசியல் என்று விஜய் சொல்லாமல் சொல்லிவிட்டார், என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டம்: ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications