"அடிமடியிலேயே".. டெல்லிக்கே புகார் பறந்துச்சாமே.. காதை "கடித்த" 2 பேர்.. "வரட்டும் இருங்க": பாஜக குஷி
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: டெல்லி வரை புகார் சென்று போய், கையிலேயே கொடுத்தும்கூட பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லையே என்று நொந்து கொண்டுள்ளனராம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள். என்ன நடந்தது?
அந்தந்த மாநில தலைவர் பதவிகளை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான மாற்றம் குறித்த பேச்சும் பரபரத்து வருகிறது.. ஏற்கனவே ஒருமுறை இப்படி ஒரு பேச்சு எழுந்தது.

ஓவரி சவுண்டு
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேஎஸ் அழகிரியிடமே ஒருமுறை கேட்டிருந்தனர்.. அதற்கு அவர், "அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த பேச்சு மீண்டும் சத்தமாக ஒலிக்க துவங்கி உள்ளது.. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் கதர்களை சுற்றி கொண்டிருக்கிறது.

தம்பி வா
அந்தவகையில் பல்வேறு மூத்த தலைவர்களின் போட்டா போட்டிகள் டெல்லி மேலிடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.. கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, "தம்பி வா தலைமையேற்க வா" என்று எம்பி கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததும் அனைவராலும் கவனிக்கப்பட்டது.. நவம்பர் 16ம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவே கருதப்பட்டாலும், தலைமையேற்க வா என்றால், எந்த பதவிக்கு இவரை அவரது ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்? என்ற சந்தேகம் கிளம்பியது. போதாக்குறைக்கு அந்த போஸ்டரில் ப.சிதம்பரம் போட்டோவும் இடம்பெற்றுள்ளது..

கொட்டை எழுத்து
தலைவர்களின் பிறந்தநாளை தொண்டர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள் என்றாலும், தலைமைச் செயலகத்தின் போட்டோவுடன் "தமிழகத்தின் எழுச்சி நாள்" என்று அந்த போஸ்டரில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சென அச்சிட்டுள்ளனர்.. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கோஷ்டி மோதலுக்கு பெயர்போனது என்பதால், மூத்த நிர்வாகிகள் இந்த போஸ்டர் கடுப்பை கிளப்பி விட்டுள்ளது.. கார்த்திக்கை விட சீனியர்கள் கட்சிக்குள் இருக்கிறார்கள் என்றாலும், சிபாரிசு எதையும் செய்துவிடுமோ? தங்களின் அடிமடியிலேயே வாரிசுகள் "கை" வைத்து விடுவார்களோ? என்ற கலக்கம் இந்த சீனியர்களை சூழ்ந்து வருகிறது.

டரியல் ப்ளான்
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு முக்கியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு ஆகியோரின் ஆதரவாளர்கள் சிலர் கடந்த வாரம் டெல்லிக்கு சென்றார்களாம்.. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர்.. அந்த சந்திப்பில், மாநில தலைவர் அழகிரியை மாற்ற வேண்டும் என்றும், அதற்கான காரணங்களையும் எடுத்து சொல்லி உள்ளார்கள்.. மேலும், சமீபத்தில் நியமிக்கப்பட்ட / தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களில் 50 சதவீதம் ஊழல் நடந்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஃபிளைட்
இது தொடர்பான புகார் மனுவை கார்கேவிடமும் இவர்கள் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து, தங்களுக்கு சாதகமான பதிலை எதிர்பார்த்தனர். ஆனால், "யாத்திரையை முடிச்சிட்டு ராகுல்ஜி வரட்டும். அவரிடம் டிஸ்கஸ் பண்ணுகிறேன்" என்று சொல்லவும், இவர்கள் 2 பேரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம்.. கார்கேவை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர்கள், "தலைவர் பதவியில் ஆள் தான் மாறியிருக்கிறார். அதிகாரம் மாறவில்லை" என்று புலம்பியபடியே சென்னைக்கு ஃப்ளைட் ஏறினார்கள் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள். இதனையறிந்து ஏகத்துக்கும் நக்கலடிக்கிறது அழகிரி தரப்பு !!

ஜோதிமணி
கடந்த 6 மாதங்களுக்கு முன்பேயே, ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தபோது, தமிழக காங்கிரஸ் தலைமை 200 சதவீதம் விரைவில் மாற்றப்படும் என்று கூறியிருந்தார்.. அந்த சமயத்தில், கரூர் எம்பி ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்களும் வெளியாகி கொண்டிருந்தன.. பெண் ஒருவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த சந்தேகத்தை ப.சிதம்பரத்திடமே செய்தியாளர்கள் கேட்டனர்.

ஹிட் லிஸ்ட்
அதற்கு பதிலளித்த அவர், தலைவர் பதவி மாற்றம் நிச்சயம் நடக்க போகிறது, நீங்கள் சொல்வதுபோல, அடுத்த தலைவராக ஜோதிமணிக்கும் வாய்ப்பிருக்கிறது, யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்புள்ளது.. ஏன், நானே தொடரவும் வாய்ப்புள்ளது என்றார்.. இந்த ஆப்ஷன்கள்தான் இப்போது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. ஏற்கனவே ராகுல்காந்தியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள ஜோதிமணியினால், கரூர் காங்கிரஸிலேயே அதிருப்தி வெடித்து வரும்நிலையில், அவர் பெயர் இப்போது சிபாரிசு செய்யப்படுமா என தெரியவில்லை.. சென்னையில் கார்த்தி சிதம்பரம் போஸ்டர்களை அடித்து ஒட்டியதை பார்த்தால், சிவகங்கையில் இருந்தே ஒருவேளை, தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதோ? என்ற டவுட்டும் கிளம்பி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications