உதயநிதியின் பிஏ யார்? செயலாளர் யார்? கைக்கு போன ஐஏஎஸ் லிஸ்ட்.. ஆஹா அவரா? எல்லாம் மாறுதே!
சென்னை: உதயநிதி துணை முதல்வாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதும் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயலாளர் பதவியை பிடிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸராக இருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சிபாரிசை கேட்டு நெருங்கி வருகின்றனர். ஆனால், உதயநிதியோ வேறு சிலரின் ஆலோசனையைக் கேட்டு தனக்கான செயலாளர்களை முடிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம். முக்கியமான ஐஏஎஸ் ஒருவரின் பெயரும் இதில் உள்ளதாம். அதேபோல, அவருக்கான தனி உதவியாளர்கள் பதவியை கைப்பற்ற, ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளும் கிச்சன் கேபினெட்டை அணுகி வருகிறார்கள்.

இந்த நிலையில், அரசியல் பி.ஏ. ஒருவரை உதயநிதி நியமித்துக்கொள்ள முடியும். அவர் அரசு அதிகாரியாக இருக்க மாட்டார். அந்த பதவியை பிடிக்க முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலரும் முயற்சித்து வருகின்றனர். முதல்வரிடம் ஆதிக்கம் செலுத்தும் முக்கியஸ்தரின் உதவியைக் கேட்டுள்ளார்கள். உதயநிதியின் துணைமுதல்வர் பதவியை வைத்து பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினிடமும் ஆட்சியிலும் பவர் ஃபுல்லாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உதயநிதியை சுற்றியிருக்கும் பதவிகளுக்கான அதிகாரிகளை முடிவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.
மனநிலை என்ன?: உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதிலும் துணை முதல்வர் பதவி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா போகும் முன் துணை முதல்வர் பதவி பற்றி அறிவிக்காத ஸ்டாலின் திரும்பி வந்ததும் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இடைப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்தது. உதயநிதிக்கு இப்போது துணை முதல்வர் பதவி தர ஸ்டாலின் நினைப்பது ஏன் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
பார்முலா 4 பந்தயத்தை சட்ட போராட்டத்திற்கு இடையே சிறப்பாக நடத்தியது, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்த போது அமைச்சர்களை சந்தித்து அவர்களின் பணிகளை ஆய்வு செய்தது என்று ஸ்டாலினுக்கு உதயநிதியின் பணிகள் நம்பிக்கையை கொடுத்துள்ளன. ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்கு திட்டங்களை வகுத்ததே உதயநிதிதான். இதிலும் வெற்றி காரணமாக ஸ்டாலின் இம்ப்ரஸ் ஆன நிலையில் அவருக்கு முதல்வர் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.
இன்று சந்திப்பு: இன்று ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே சந்திப்பு நடந்தது. இதிலும் துணை முதல்வர் பதவி பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளதாம்.
ஸ்டாலின் ஆலோசனை: சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் பங்கேற்று உள்ளார்.
அதன்படி.. இந்த மீட்டிங்கில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்கள் எல்லோரும் சப்போர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications