"இரட்டை இலை சின்னம் யாருக்கு!" சத்யபிரதா சாகு பளிச் பதில்! லோக்சபா தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்?
சென்னை: லோக்சபா தேர்தலில் தங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என ஓபிஎஸ் கூறி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்துத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
விரைவில் நமது நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இதற்குக் கூட்டணி உறுதி செய்வது, தொகுதிப் பங்கீட்டை முடிப்பது போன்ற பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் கவனித்து வருகிறது.

தேசியளவில் இந்த முறை பாஜகவின் என்டிஏ vs எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. மறுபுறம், தமிழ்நாட்டில் இங்கே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி உள்ளது.
லோக்சபா தேர்தல்: திமுக தரப்பில் ஏற்கனவே கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீடும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே அவர்கள் சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டையும் கூட இறுதி செய்துவிட்டனர். மறுபுறம் அதிமுகவில் அப்படி பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
அதேநேரம் மறுபுறம் ஓ. பன்னீர்செல்வம் தாங்கள் தான் ரியல் அதிமுக என்றும் அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகக் கூறி வருகிறார். மேலும், தாங்கள் பாஜக கூட்டணியில் தான் தொடர்ந்து இருந்து வருவதாகக் குறிப்பிடும் அவர், பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்கப் பாடுபடுவோம் என்று பேசி வருகிறார். மேலும், அவர் இரட்டை இலை சின்னத்தின் தான் நாங்கள் போட்டியிடுவோம் கூறி வருகிறார்.
அதிமுக இரட்டை இலை: இதுவரை கடந்த காலங்களில் வந்த நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் எடப்பாடி தரப்பை தான் அதிமுக என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் இரட்டை இலை சின்னமும் அவர்களுக்கே இருக்கிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் தங்களுக்குத் தான் இரட்டை இலை எனக் கூறியது பரபரப்பைக் கிளப்பியது. இதற்கான விளக்கத்தையும் கூட அவரை கொடுத்திருந்தார்.
அதாவது, "இந்த விவகாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை எடப்பாடிக்கு வந்த அனைத்து தீர்ப்புகளும் தற்காலிகமானது தான். இந்த வழக்கை இப்போது சிவில் சூட் தான் கவனித்து வருகிறது. அவர்கள் தரும் தீர்ப்பு தான் இறுதியானது. இதற்கு முன்பு வழங்கப்பட்டு எந்த தீர்ப்பும் அதைக் கட்டுப்படுத்தாது எனச் சொல்லி இருக்கிறார்கள்" என்றார். அந்த சிவில் சூட் வழக்கில் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும் என ஓபிஎஸ் நம்புகிறார்.
சாகு விளக்கம்: இதை எல்லாம் சுட்டிக்காட்டி தங்கள் தரப்பிற்குத் தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடமும் அவர் மனு அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தல் நெருங்கும் போது மீண்டும் இரட்டை இலை சின்னம் பேசுபொருள் ஆகி இருக்கிறது.. இதற்கிடையே தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
சென்னையில் நடந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட அவர் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பு கோரிக்கை விடுக்கும்போது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு அவர், "அப்படி எங்களுக்குக் கோரிக்கை வந்தால் அந்த கடிதத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம். அவர்கள் அதைப் பரிசீலனை செய்து உரிய உத்தரவைப் பிறப்பிப்பார்கள். அதன்படி நாங்கள் செயல்படுவோம்" என்று பதில் அளித்தது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications