ரஜினியை விட அதிமுகவுக்கே அதிக மக்கள் ஆதரவு.. திமுக நம்பர் 1.. சரவெடி சர்வே!
சென்னை: தமிழகத்தில், அறிவிக்கப்படாத தேர்தல் காலம், துவங்கிவிட்டது. புதிதாக களத்திற்கு ரஜினிகாந்த் வருவதாக அறிவித்ததும், தேர்தல் ஜுரமே துவங்கிவிட்டது. ரஜினி பேட்டி.. அந்த பேட்டிக்கு போட்டி பேட்டிகள் என, அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது அரசியல் களம்.
இப்படியான சூழ்நிலையில்தான், திமுகvsஅதிமுக என்ற நிலை மாறி, ரஜினியால் மும்முனை போட்டி நிலவும் என்று பலரும் எதிர்பார்த்து கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், 'ஒன்இந்தியா தமிழ்' சார்பில் ஒரு கருத்துக் கணிப்பு முன் வைத்தோம்.

யார் ஆட்சி அமையும்
தமிழகத்தில் யாருடைய ஆட்சி அடுத்து அமையும்? என்ற கேள்வி கேட்டு, 8 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது. அதில், திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி, பாஜக ஆட்சி, மக்களாட்சி அமைஞ்சா சரி, ரஜினி ஆட்சி, சீமான் ஆட்சி, கமல்ஹாசன் ஆட்சி, 3வது அணியின் ஆட்சி, இவ்வாறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது.

திமுகவுக்கு அமோக ஆதரவு
பெரும்பாலான வாசகர்கள், திமுக ஆட்சிதான் வரப்போகிறது என அடித்துச் சொல்லியுள்ளனர். அதுவும் 55.31 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோரின் ஒரே சாய்சாக திமுக உள்ளது. 2வது இடம் எதிர்பார்த்தபடி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. ஆனால் வித்தியாசம் ரொம்பவே அதிகம். வெறும் 12.79 சதவீதம் பேர் அதிமுக ஆட்சி வரும் என்று கருதுகிறார்கள்.

தாமரை மலருமாம்
பாஜக ஆட்சி என்றும் நமது வாசகர்களில் சிலர் கருத்து கூறியுள்ளனர். சுமார் 2 சதவீதம் அதாவது 1.98 சதவீதம் பேர் தாமரை மலரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மக்களாட்சி அமைஞ்சா சரி என்ற மனநிலையில் 6.22 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

அதிமுகவைவிட ரஜினிகாந்த்துக்கு குறைவு
பெரிய ஆரவாரத்தோடு கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த்துக்கு எதிர்பார்த்த ஆதரவை வாசகர்கள் தரவில்லை. 12.24 சதவீதம் பேர் மட்டுமே ரஜினி ஆட்சி அமையும் என்று கூறியுள்ளனர். அதாவது அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பவர்களை விடவும் குறைவுதான் ரஜினிக்கு கிடைத்துள்ளது.

சீமான், கமல்ஹாசன்
சீமான் ஆட்சி என 6.19 சதவீதம், கமல்ஹாசன் ஆட்சி என 2.88 சதவீதம், 3வது அணி ஆட்சி என 2.4 சதவீதம் பேர் அடித்துக் கூறுகிறார்கள். மக்களின் மனநிலை என்ன என்பதை எடுத்துக் காட்டுவதை போல அமைந்துள்ளது இந்த கருத்துக் கணிப்பு.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications