"அதே டெய்லர், அதே வாடகை.!" அமித் மால்வியாவை வைத்து செய்த பிரகாஷ் ராஜ்! நடுவில் சம்பவம் செய்த பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஃபோட்டோ இணைய பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

இந்தியாவில் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களின் பலத்தைப் புரிந்து கொண்ட கட்சி பாஜக. பல ஆண்டுகளாகவே அவர்கள் சமூக வலைத்தளங்களில் கட்சியை வலுவாக வைத்து உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் ட்விட்டர் தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

 அமித் மால்வியா

அமித் மால்வியா

இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கட்சிகளில் முதன்மையானது பாஜக. ஐடி பிரிவை நாட்டில் அமைப்பு ரீதியாகவே முதலில் வலுப்படுத்திய கட்சி பாஜக ஆகும். பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான படங்களை பாஜகவின் பிற தலைவர்களும் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருவார்கள் அப்படி அக்கட்சியின் ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா பதிவிட்ட ஒற்றை போட்டோ தான் இணையத்தில் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

 படம்

படம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப். 2ஆம் தேதி தான் கர்நாடகாவுக்குச் சென்று பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது எடுக்கப்பட்டதாகக் கூறி ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா ஒரு படத்தைப் பதிவிட்டு இருந்தார். இந்தப் படத்தில் பாஜகவின் அந்த பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடி இருந்ததும் அவர்களை நோக்கி பிரதமர் மோடி மேடையில் இருந்து கையசைப்பது போலவும் இருந்தது.

 பழை ஃபோட்டோ

பழை ஃபோட்டோ

இந்த ஃபோட்டோ உடனடியாக இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இருப்பினும், விஷயம் என்னவென்றால் இதே படத்தை அமித் மால்வியாவே கடந்த 2019இல் பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடியைக் காணக் கொல்கத்தாவில் திரண்டு இருந்த கூட்டம் என அவர் பதிவிட்டு இருந்தார். அந்த பழைய வீடியோவில் இருந்து இந்த புதிய ஃபோட்டோ எடுக்கப்பட்டு உள்ளது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சிக்கத் தொடங்கினர்.

 அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

சில ஃபேக்ட் செக்கிங் இணையதளங்களும் இதை விளக்கி செய்தி வெளியிட்டன. இதனை இணையத்தில் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை ஷேர் செய்த தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர், "21ஆம் நூற்றாண்டின் உண்மையான கோயபெல்ஸ்... அவ்வளவு புத்திசாலி இல்லை போல இதுபோன்ற அடிப்படை பிழைகளைக் கூட அவரால் சரி பார்க்க முடியவில்லையா?" என்று மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

 நடிகர் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ்

அதேபோல நடிகரும் பாஜகவைச் சமீப காலமாக மிகக் கடுமையாக விமர்சித்து வருபவருமான பிரகாஷ் ராஜ், "யாரை ஏமாற்றுகிறீர்கள்... பல இடங்கள்.. ஆனால்... அதே நடிகர்.. அதே உடை.. அதே செட்.. அதே கூட்டம்" என்று கிண்டல் தொணியில் பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவை வெளிப்படையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பெங்களூரில் இருந்து போட்டியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+