சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமோகம்! திமுக "டோர் க்ளோஸ்".. பொன்னான வாய்ப்பை தட்டி பறிக்கும் அந்த 2 பேர்.. குஷியில் அமித் ஷா டீம்?

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தனது கூட்டணி கட்சிகளின் உதவியுடன் எப்படியாவது வெற்றி பெற முயற்சிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போன்ற கட்சிகளின் உதவியுடன் தங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைக்க பாஜக முயற்சி செய்யும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் கொண்டு உள்ளன.

காவித் துண்டு போட்டவரை தொட்டுப்பார்... திமுகவுக்கு ஹெச்.ராஜா சவால்!காவித் துண்டு போட்டவரை தொட்டுப்பார்... திமுகவுக்கு ஹெச்.ராஜா சவால்!

இந்த தேர்தலில் 51 சதவிகித வாக்குகள், அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது கிட்டத்தட்ட 5.49 லட்சம் வாக்குகள் பெற வேண்டும்

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி


இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 48.2 சதவிகித வாக்குகள் பாஜக கூட்டணிக்கு உறுதி ஆகி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் ஆதரவு தந்தால் பாஜக நிறுத்தும் வேட்பாளர் குடியரசுத் தலைவராக தேர்வாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனென்றால் குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய 51 சதவிகித வாக்குகள் தேவை. இந்த நிலையில்தான் நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுத்து பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.

 பாஜக அதிர்ச்சி

பாஜக அதிர்ச்சி

முதல்வர்கள் கே சந்திரசேகர ராவ், மமதா பானர்ஜி ஆகியோர் நிதிஷின் ஆதரவை பெற்று, எதிர்க்கட்சி சார்பாக வலுவான வேட்பாளரை நிறுத்த முயன்று வருகிறார்கள். தற்போது நிதிஷ் - பாஜக இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதோடு நிதிஷ் குமார் கட்சியின் ஒரே ஒரு மத்திய அமைச்சர் ஆர்சிபி சிங்கும், பாஜக அமைச்சரவையில் இருந்து வெளியேற உள்ளார் (ராஜ்ய சபா எம்பி பதவி பறிபோகிறது). இதனால் நிதிஷ் குமார் பாஜகவிற்கு இந்த தேர்தலில் ஆதரவு அளிப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.

பாஜக பிளான்

பாஜக பிளான்

இந்த நிலையில்தான் பாஜக பெரும்பாலும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அல்லது ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவோடு தங்கள் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கலாம் என்கிறார்கள்.அதாவது நிதிஷ் ஆதரவு போனால்.. இவர்கள் இருவரின் ஆதரவை பாஜக நாடலாம். இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவையும் எதிர்ப்பது இல்லை, காங்கிரசையும் எதிர்ப்பது இல்லை. ஆனாலும் பாஜக கட்சியுடன் இரண்டு கட்சிகளும் ஒரு வித அண்டர் ஸ்டாண்டிங்கில் உள்ளது. இன்னொரு பக்கம் இரண்டு கட்சிகளுக்கும் காங்கிரஸ் என்றால் ஆகாது.

ஜெகன், நவீன்

ஜெகன், நவீன்

ஜெகன் மோகனும் சரி, நவீன் பட்நாயக்கும் சரி, காங்கிரஸ் கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க உடன் வர மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இருவருக்கும் காங்கிரஸ் என்றால் ஆகாது. இதனால் இந்த இரண்டு தலைவர்களில் ஒருவர் அல்லது இருவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளருக்கு 51% சதவிகித வாக்குகள் கிடைப்பது என்பது கொஞ்சம் சிக்கல்தான். பாஜகவில் அமித் ஷா டீம் இதனால் கொஞ்சம் குஷியில் இருக்கிறதாம்.

திமுக டோர் க்ளோஸ்

திமுக டோர் க்ளோஸ்

முன்னதாக திமுகவின் ஆதரவை பாஜக எதிர்பார்க்காலம் என்று கூறப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவர் ரேஸில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லை என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன. பாஜக புதிய முகம் ஒருவரை சர்ப்ரைஸாக களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் திமுக பெரும்பாலும் எதிர்க்கட்சி வேட்பாளரையே ஆதரிக்கும். இதனால் ஜெகன் அல்லது நவீன் ஆகியோர் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
Whom Jegan Mohan and Naveen Patnaik will support in presidential election of India? நடக்க உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தனது கூட்டணி கட்சிகளின் உதவியுடன் எப்படியாவது வெற்றி பெற முயற்சிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X