மத்திய அரசின் 'Y' பாதுகாப்பு பிடியில் நடிகர் விஜய்.. அத்தனை ரகசிய ஆலோசனைகளுக்கும் திடீர் கடிவாளம்!
சென்னை: தமிழக வெற்றி கழக்த்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு மத்திய அரசு திடீரென Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். அத்துடன், நடிகர் விஜய், பல்வேறு தரப்பினரை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்; இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் Y பிரிவு பாதுகாப்பால் கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.
தமிழ்நாட்டில் தேர்தல் அரசியல் களத்தில் இன்னமும் இறங்காத அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம். ஆனால் திடீரென விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது குறித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிற தலைவர்கள் பலரும் இருக்கும் நிலையில் நடிகர் விஜய்-க்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு என்பது அவர்களது கேள்வி.
அத்துடன் நடிகர் விஜய் தரப்பிலும் Y பிரிவு பாதுகாப்பு உத்தரவை அவ்வளவாக ரசிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றி கழக வட்டாரங்களில் விசாரித்த போது நம்மிடம் பகிர்ந்தவை: பொதுவாக நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக உளவு பிரிவுகள் கண்காணித்து வந்தன. இந்த நடவடிக்கைகள் சற்று தொலைவில் இருந்துதான் கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் நடிகர் விஜய் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளும் வெளிப்படையானதாக அமைந்துவிடும்; குறிப்பாக மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு பிரிவினருக்கு அப்பீசியலாக அனைத்தும் தெரிந்த ஒன்றாகிவிடும்.
உதாரணமாக நடிகர் விஜய் இதுவரை பல்வேறு தரப்பினரை வேறு இடங்களில் ரகசியமாக சந்தித்து பேசியிருக்கலாம்; நடிகர் விஜய்யை மிக முக்கியமான அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ரகசியமாகவும் விஜய் வீட்டிலேயே சந்திக்க வந்திருக்கலாம். இவை எல்லாம் வெளியே தெரியாமலே நடந்தவையாக இருந்திருக்கும். ஆனால் இனி நடிகர் விஜய் எங்கே வெளியே சென்றாலும் அவரை Y பிரிவு பாதுகாப்பு பின் தொடரும்; டெல்லி மேலிடத்துக்கு விஜய் எங்கே செல்கிறார்; யாரை சந்திக்கிறார்; விஜய்யை யார் சந்திக்க வருகிறார்கள் என்பதும் அப்பீசியலாகவே டெல்லி மேலிடத்துக்கு தெரிந்துவிடும்; இதுவரை டெல்லி மேலிடம் உளவு அதிகாரிகள் மூலமாக பெற்ற தகவல்கள் இனி Y பிரிவு பாதுகாப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக பெற்றுக் கொள்ளும்; அத்துடன் இப்படி Y பிரிவு பாதுகாப்பு பிடியில் இருப்பதால் விஜய்யின் இத்தகைய ஆலோசனைகள் இனி நடைபெறாமல் தவிர்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்; ஆகையால்தான் இந்த பாதுகாப்பு எங்களுக்கான நெருக்கடி என்கிறோம். இவ்வாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
-
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications