போனை எடுக்காத எடப்பாடி.. அப்படியே இடிந்து போய்.. இரவு 9 மணிக்கு வந்த அந்த "போன்".. என்ன நடக்கிறது?
எடப்பாடி பழனிசாமி தேர்தல் முடிவால் அப்செட்டில் இருக்கிறாராம்
சென்னை: தேர்தல் தோல்வியால் கடுமையான அப்செட்டுக்கு ஆளாகி உள்ளது அதிமுக மேலிடம்.. இனி அடுத்து என்ன நடக்க போகிறது என்பது குறித்தான விவாதம் நடந்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் ரிசல்ட் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை.. திமுகவின் வெற்றியாக இருந்தாலும் சரி, அதிமுகவின் தோல்வியாக இருந்தாலும் சரி.
இதுவரை பெற்றி பெறாத அதிமுகவின் கோட்டைகளை எல்லாம் திமுக வென்றெடுத்துள்ளது இந்த தேர்தலில் திமுகவின் சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சொந்த தொகுதிகளில் மண்ணை கவ்வியது அதிமுகவின் படுதோல்வியாக பார்க்கப்படுகிறது.

சொந்த தொகுதி
இதே சேலத்தில் அன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தபோது, நீட் தேர்வு விஷயம் குறித்து விவாதிக்க முதல்வருக்கு சவால் விடுத்தார்.. ஸ்டாலின் பொய் பொய்யா பேசுகிறார்... பொய் பேசுவது அவருக்கு கை வந்த கலை.. கடந்த 9 மாதங்களில் நீங்கள் என்ன திட்டத்தை சேலத்துக்கு கொண்டு வந்தீர்கள்?. திமுகவின் செல்வாக்கு இப்போது சரிந்து வருகிறது என்றெல்லாம் பேசிவிட்டு போனார். கடைசியில் சொந்த தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி, 50 வருடங்களுக்கு பிறகு இந்த தேர்தலில் திமுக வசமாகி உள்ளது...

சேலம்
மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக 17 இடங்களிலும், அதிமுக 13 இடங்களையும் பிடித்துள்ளது. அதேபோல எடப்பாடி பழனிசாமியின் வீடு சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கிறது.. சேலம் மாநகராட்சியின் 23வது வார்டுக்குட்பட்ட இங்கு திமுக வெற்றி வாகை சூடியது. இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இந்திராவை விட திமுக வேட்பாளர் சிவகாமி 1,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். முன்னாள் முதல்வர் தொகுதி மற்றும் வீடு இருக்கும் பகுதியிலேயே திமுக வெற்றி பெற்றிருப்பது அதிமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்குழுவை கூட்டுங்கள்
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட மிக மோசமான தோல்வி, அக்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொண்டர்களின் மனநிலையும் இருந்து வருகிறது. இதையடுத்து, "கட்சியின் பொதுக் குழுவை கூட்டுங்கள், தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும்" என்று மாநில நிர்வாகிகள் பலரும் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அழுத்தம் கொடுக்கத் துவங்கி விட்டார்கள்.. உள்ளாட்சியில் ஏற்பட்ட தோல்வி, கட்சியின் தலைமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற விவாதத்தையும் இது உருவாக்கி வருகிறது.

ஒற்றை தலைமை
மூத்த தலைவர்கள் கூட "ஒற்றை தலைமை" தான் கட்சிக்கு சரியாக இருக்கும் என்கிற விமர்சனத்தை துவக்கியிருக்கிறார்கள்... தேர்தல் முடிவுகள் வர வர... எடப்பாடி, ஓபிஎஸ் தொடங்கி மூத்த தலைவரகள் பலரும் அப்-செட்டாகி விட்டனராம்.. மதியம் 12 மணிக்கு மேல் மாவட்டங்களில் இருந்து வந்த ஃபோன்கால் எதையும் அட்டெண்ட் பண்ணவில்லையாம் எடப்பாடி.. அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டாராம்.

படுஅப்செட்
ஒரு கட்டத்தில் தனது பெர்சனல் ஃபோனை ஆஃப் செய்யும் அளவுக்கு போய்விட்டார்.. அந்தளவுக்கு தேர்தல் முடிவுகள் அவரை இம்சை படுத்திவிட்டது என்கிறார்கள்.. நேற்று இரவு 9 மணிக்குதான் தங்கமணி, வேலுமணி இருவரிடமிருந்தும் வந்த ஃபோன் கால்களை அட்டெண்ட் பண்ணியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, "நம் சமூகம் கூட நம்மை கைவிட்டு விட்டது பார்த்தீர்களா? ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் சமூகம் கூட நம் பக்கம் நிற்கும் போல!" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி.
Recommended Video

விவாதிக்க முடிவு
அதனை தங்கமணி, வேலுமணி ஆமோதித்துள்ளனர். இப்போது கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விவாதிக்க முடிவு செய்திருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. உட்கட்சி பூசலை தவிர்த்து பிரச்சனைகளை கூடி விவாதிப்பதா? அல்லது கட்சியை பலப்படுத்துவதா? அல்லது சோர்வடைந்து போன தொண்டர்களை ஊக்கப்படுத்துவதா? அல்லது திமுகவை சமாளிப்பதா? என்ற பல கட்டபிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறது அதிமுக மேலிடம்..!












Click it and Unblock the Notifications