டெல்லியே போனாலும் சிக்கல்தான்? மொத்தமாக முடியும் ஓபிஎஸ் "கேம்".. எடப்பாடிக்கு பச்சை கொடி.. ஏன்?
சென்னை: அதிமுக அலுவலக சீல் வழக்கில் தோல்வி அடைந்தது ஓ பன்னீர்செல்வதற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதில் நீதிபதி குறிப்பிட்ட சில விஷயங்கள், ஓ பன்னீர்செல்வத்திற்கு மற்ற வழக்குகளில் எதிராக திரும்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனே நீக்க வேண்டும். இது சொத்து தகராறு கிடையாது. கலவரம் காரணமாக கட்டிடத்தை பிடித்தால் அதற்கு சீல் வைக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதோடு உடனடியாக அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க வேண்டும். அவர் தொண்டர்கள் இல்லாமல் அலுவலகம் வேண்டுமென்றால் செல்லலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொன்னார்?
இதில் இதில் நீதிபதி குறிப்பிட்ட சில விஷயங்கள், ஓ பன்னீர்செல்வத்திற்கு மற்ற வழக்குகளில் எதிராக திரும்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முக்கியமாக அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமிதான் உரிமையாளர். அவர் கட்டுப்பாட்டில்தான் கலவரம் நடக்கும் முன் அலுவலகம் இருந்தது. அதனால் அவர்தான் கட்டிடத்தின் உரிமையாளர். அதோடு ஜெயலலிதா - ஜானகி வழக்கிலும் இப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் ஆட்களை அழைத்துக்கொண்டு வந்து அதிமுக அலுவலகம் சென்றது தவறு. வன்முறை மூலம் ஒரு இடத்தை பிடிக்க கூடாது. அதோடு இதற்காக ஒரு அலுவலகத்தை சீல் வைப்பதும் ஜனநாயக முறைப்படி தவறானது. இதை அனுமதித்து இருக்க கூடாது என்று நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில் குறிப்பிட்டது. இந்த உத்தரவுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

உற்சாகம்
எடப்பாடி பழனிசாமி தரப்போ.. இந்த தீர்ப்பு எங்களுக்கு பல வகைகளில் சாதகமாக வந்துள்ளது. அதிமுக அலுவலகத்திற்கு நாங்கள்தான் சொந்தகாரர்கள் என்பது உறுதியாகி உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை கைப்பற்றியது தவறு என்று நீதிமன்றம் உறுதியாக சொல்லி உள்ளது. இதன் மூலம் அதிமுகவிற்கு - ஓ பன்னீர்செல்வத்திற்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இது மற்ற வழக்கிலும் பயன்படும் என்று எடப்பாடி தரப்பு நம்புகிறது.

ஓ பன்னீர்செல்வம்
ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ.. இதற்கும் மற்ற வழக்குகளுக்கும் சம்பந்தம் கிடையாது. இந்த வழக்கில் அதிமுக அலுவலகம் முன்பே எடப்பாடி கட்டுப்பாட்டில் இருந்ததால் அதை அவரிடமே கொடுக்கிறோம் என்றுதான் கூறி உள்ளது. அதோடு கட்சியை விட்டு ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியதை பற்றி நீதிபதி சொன்ன கருத்துக்கு உடனே பதில் வாதமும் வைக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு முடிவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று இந்த வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கிறோம்.

வழக்கு மேல்முறையீடு
அதனால் இந்த வழக்கு தீர்ப்பு எந்த வகையிலும் மற்ற விசாரணைகளை பாதிக்காது. முக்கியமாக அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான வழக்கிற்கும், இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எடப்பாடி தரப்பிற்கு இந்த வழக்கு எந்த வகையிலும் பலன் அளிக்க போவதில்லை என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கையாக பேசி உள்ளது.

சட்ட வல்லுனர்கள்
ஆனால் சட்ட வல்லுனர்களோ.. இந்த வழக்கிற்கும், அதிமுக பொதுக்குழு வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்பது சரிதான். ஆனால் இந்த வழக்கில் நீதிபதியே, பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும் (ஓபிஎஸ் நீக்கம்) என்று கூறியுள்ளது. இதைத்தான் மற்ற கோர்ட்டும் சொல்லும். தேர்தல் ஆணையமும் இதைத்தான் சொல்லும். எனவே இதில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு சாதகமாக சூழ்நிலை எதுவும் நிலவவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications