என்னங்க இது? இந்திய பங்குசந்தையிலிருந்து வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்கள்! தேர்தல் முடிவில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளனர்.

நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

Why are companies from foreign leaving the Indian share market and What is the reason behind it

5ம் கட்ட தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.

பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண்; மற்றும் அனைத்து ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் கல்யாண் ஆகிய தொகுதிகள் ஆகும்.

வெளியேற திட்டம்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியற்றது என்று பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சில கருத்து கணிப்புகளில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளனர்.

பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மையின் அளவீடான VIX தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த அளவீடுதான் பங்குச்சந்தை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உறுதி செய்யும். இந்த மாதத்தில் 20.6 ஆக இந்த மதிப்பு உயர்ந்துள்ளது.

வெளியேறும் நிறுவனங்கள்: இது தேர்தலின் தொடக்கத்தில் இருந்ததை விட 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பங்குசந்தை ரத்த களரியாக இருக்க போகிறது..தேர்தலுக்கு பின் ரத்த களரியாக மாற போகிறது என்பதற்கான அறிகுறியாக மாறி உள்ளது.

இதனால் ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, இந்த மே மாதத்தில் இதுவரை இந்தியாவின் பங்குச் சந்தைகளில் இருந்து நிகர $3.5 பில்லியனை வெளிநாட்டினர் வெளியே எடுத்துள்ளனர். முதலீட்டில் இருந்து வெளியே எடுத்து வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளனர்.

ஜூன் 2023க்குப் பிறகு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உலக முதலீட்டை திரும்ப பெறுவது இதுவே முதல்முறை.

சுமார் ரூ.29,000 கோடி அளவிற்கு இந்திய பங்குச்சந்தையில் செய்திருந்த முதலீடுகளை திரும்பப் பெற்று சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+