தேர்தல் நெருங்குறப்ப சிக்கலாப்பா? பார்களால் வந்த பிரச்சனை.. திமுகவில் ஒன்றிய செயலாளர்கள் குடைச்சல்?
சென்னை: டாஸ்மாக்கில் நடத்தப்படும் பார் ஒப்பந்தங்களை வாங்கித் தரச்சொல்லி நச்சரித்து வருகிறார்கள் திமுக ஒன்றிய செயலாளர்கள் என்று அரசியல் வட்டார தகவல் ஒன்று வட்டமடிக்க தொடங்கி உள்ளது. அவர்களின் நச்சரிப்பை சகித்துக் கொள்ள முடியாமால் திமுக அமைச்சர்கள் திணறுகின்றனர் என்று ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 5,425 டாஸ்மாக் கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் அரசு பார்களை அனுமதித்தது. கடந்த ஆட்சியில் முறைப்படி டெண்டர் அறிவிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு இந்த பார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் திமுக, அதிமுக கட்சிகளை சேர்ந்த பலரரும் ஒதுக்கீடு பெற்றனர். 2021 தேர்தலில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. டாஸ்மாக் அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் பார்களுக்கு ஏலம் விடுகிற பேரில் ஏகப்பட்ட கெடுபிடிகள் நடந்தன. செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் தலைமையில் இயங்கிய குழு ஒன்று வைத்ததுதான் சட்டம் என்றும் கூறப்பட்டது.
பொதுவாகவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் ஏலம் தொடர்பாக இந்த புகார்கள் வைக்கப்படுவது வழக்கம். டாஸ்மாக் தொடர்பாக அதிமுக ஆட்சியிலும் இதேபோல் புகார்கள் வைக்கப்பட்டன. தற்போது திமுக ஆட்சியிலும் டெண்டர் தொடர்பான புகார்கள் வைக்கப்படுகின்றன.
பார்கள் ஒதுக்கீடு: ஆட்சி மாற்றத்திற்கு பின்பும் ஒவ்வொரு பார்களுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு அதனை ஏற்று ஒப்புக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே பார்கள் ஒதுக்கப்பட்டன. தினசரி வசூலில் அந்த கரூரை சேர்ந்த குழுவிற்கு குறிப்பிட்ட சதவீத தொகையை கமிஷனாக தந்துவிட வேண்டும் என்கிற நிபந்தனைகளும் உருவாக்கப்பட்டன. பார்கள் இப்படி ஒதுக்கப்பட்ட நிலையில், பார் உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யும் நிலை உருவானது.
இதனால், மொத்தமுள்ள கடைகளில் முறைப்படி 20 சதவீத பார்கள் மட்டுமே இயங்கின. 80 சதவீத கடைகளில் பார்கள் சட்டவிரோதமாக நடந்தன. இதனை அசோக் தலைமையில் ஒரு குழு இயக்கி வந்ததாக கூறுகிறார்கள். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள், அமலாக்கத்துறை ரெய்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் அந்த 80 சதவீத சட்டவிரோத பார்களில் சுமார் 25 சதவீத பார்களை மூடிவிட்டு, சட்ட விரோத பார்கள் மூடப்பட்டு விட்டதாக வெளி உலகத்துக்கு காட்டினர்.
மீதமுள்ள 55 சதவீத பார்கள் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டுதான் இருந்ததாம். ஆனால் இது எல்லாம் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தான். இந்த நிலையில் மூடப்பட்ட 25 சதவீத சட்டவிரோத பார்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று மாவட்ட அமைச்சர்களிடமும், பொறுப்பு அமைச்சர்களிடமும், மா.செ.க்களிடமும் அந்தந்த மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். இது ஒருபுறமிருக்க சட்டவிரோதமாக ரகசியமாக இயங்கிக் கொண்டிருக்கும் 55 சதவீத பார்களை குறிவைத்தும் திமுக தலைகள் சிலர் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
அதாவது செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை ; இருப்பினும் ஒரு டீம் மூலம் இதேபோல் பணம் வசூலிக்கப்பட்டு தற்போதைய அமைச்சர் முத்துச்சாமியிடம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த கேங்கை எல்லாம் முற்றிலுமாக ஒழித்துவிட்டு கட்சிக்காரர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என காய்களை நகர்த்துகின்றனர். அதிமுக ஆட்சியில் அவர்களின் மாவட்ட, ஒன்றிய செயலாளர்களுக்கு பார்கள் கிடைத்தன. நமக்கு அப்படி கிடைக்கவில்லை. இந்த முறை விடக்கூடாது என்று திமுகவினர் தீவிரமாக இருக்கிறார்களாம்.
ஒன்றிய செயலாளர்கள் கோரிக்கையை எப்படி சரி செய்வது என அமைச்சர்கள் திணறுகிறார்கள். காரணம், பார்கள் விவகாரத்திலிருந்து வரும் லாபம் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வதால், கட்சிக்காரர்களிடம் ஒப்படைக்கும் போது அந்த லாபம் வருமா? என்பதுதான். அதனால் ஒ.செ.க்களின் கோரிக்கையை மேலிடம் ஏற்காது என்பதாலும் ஒ.செ.க்களின் எதிர்பார்ப்பினை மேலிடத்திடம் எப்படி கொண்டு செல்வது என தயங்குகின்றனர்.
ஆனால், தங்களுக்கு எந்த நன்மையையும் செய்ய அமைச்சர்கள் விரும்புவதில்லை என்கிற கோபத்தில் ஒ.செ.க்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிக்காரர்கள் அதிர்ப்தியடைந்தால் அது கட்சியை பாதிக்கும் என்றும் அதனை தலைமை உணரவேண்டும் என்றும் திமுகவில் குரல்கள் அடிமட்டத்தில் எதிரொலிக்கிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications