தெய்வமே இதெல்லாம் நியாயமா.. சென்னை இதுவரை சந்திக்காத பிரச்சனை.. மின்சார ரயில் சேவையில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு பராமரிப்பு என்ற பெயரில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது புதிது இல்லை என்றாலும், அண்மைக் காலத்தில் பராமரிப்பு என்ற பெயரில் எல்லா வழித்தடத்திலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது மிகவும் புதிய ஒன்றாகும். மின்சார ரயில் சேவைகளை ஒட்டுமொத்தமாக இப்படி பராமரிப்பு என்ற பெயரில் ரத்து செய்வது சென்னை மக்களை மோசமாக பாதித்துள்ளது.

சென்னை இதுவரை சந்திக்காத பிரச்சனையை சந்தித்துள்ளது. ஆம், சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் அடிக்கடி மொத்தமாக நிறுத்தப்படுகிறது. சென்னைக்கு வரமாக இருந்த மின்சார ரயில்கள், முறையாக சேவைகளை அளிக்காமல் நிறுத்தப்படுவது பல வருட சரித்திரத்தில் இதுவே முதல் முறை. முதலில் ஞாயிறுகளில் நிறுத்தினார்கள்.

Chennai electric train tambaram

அதன்பின்னர் சனி மற்றும் ஞாயிறு என்று நிறுத்தினார்கள். அதன்பிறகு பராமரிப்பு என்ற பெயரில் இரவு நேர ரயில் சேவைகளை நிறுத்தினார்கள். இப்போது பகல் நேரங்களில் பல்லாவரத்தை தாண்டி ரயில் போகாது என்று நிறுத்தி உள்ளார்கள். செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மேல் ரயில்கள் இயங்காமல் போய் உள்ளது. அவ்வப்போது ஆவடி வழித்தடத்திலும் மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு என்ற பெயரில் நிறுத்தப்படுகிறது.

சென்னை புறநகர் பகுதி மக்களை பொறுத்தவரை அவர்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கையும் இரண்டற கலந்த ஒன்று என்றால் அது மின்சார ரயில்கள் தான். மின்சார ரயில்களில் தான் தினமும் வேலைக்கு சென்று வருகிறார்கள். இப்போது அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் நிறுத்துவது அல்லது ரத்து செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது. மாதாந்திர பாஸ் எடுத்து வேலைக்கு சென்று வந்தவர்கள், குறைந்த நேரத்தில் ஆபிஸ்க்கு போய் வந்தவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களில் பட்ட கஷ்டத்தை போல் கடந்த பல வருடங்களில் சந்தித்தது இல்லை..

சென்னை ஆவடி அருகே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து வந்த மூன்று ரயில்கள்.. சட்டென பயணிகள் செய்த செயல்


மின்சார ரயில் சேவைகள் இல்லாமல் போனால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்து போகும் என்று தெரிந்தும் இப்படி பராமரிப்பு என்ற பெயரில் எங்களை பாடாய்படுத்துவது நியாயமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் தாம்பரம் செங்கல்பட்டு பகுதி மக்கள். கடந்த ஜூலை 23ம் தேதி இரவில் ரயில் சேவைகளை ரத்து செய்த தெற்கு ரயில்வே, பகலில் ரயில் சேவைகளை வெகுவாக குறைத்துவிட்டது. செங்கல்பட்டு-கடற்கரை மார்க்கமாக ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டிய தெற்கு ரயில்வே மாறாக ரயில் சேவைகளை குறைப்பது தவறு மக்கள் தெரிவித்தனர்.

பராமரிப்புக்கு முன்பு சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே தினமும் 252 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தினமும் 5 லட்சம் பேர் பயணம் செய்து வந்தார்கள். செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சென்னையின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலை நிமித்தமாகவும், கல்லூரிகளுக்கு செல்லவும், சொந்த வேலை காரணமாகவும் மின்சார ரயில்களில் பயணிப்பது வாடிக்கை.

எனவே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இனிமேலாவது பராமரிப்பு என்ற பெயரில் மின்சார ரயில் சேவைகளை இனிமேல் குறைக்காமல் வழக்கம் போல் ரயில்களை இயக்குவதுடன், கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் நான்காவது பாதையை உடனடியாக அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறிய மக்கள், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+