என்னங்க நடக்குது? டெல்லிக்கு அவசரமாக விரைந்த அண்ணாமலை! பின்னாடியே போன ஆளுநர் ரவி! இப்படி ஒரு காரணமா?
சென்னை: நேற்று இரவு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேலிடத்தின் அவசர அழைப்பின் பேரில் டெல்லிக்கு விரைந்தார். இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் தமிழக ஆளுநர் ரவியும் அவசரமாக டெல்லி செல்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவரது பதவி நீட்டிப்பு தொடர்பான குழப்பங்கள் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலைக்கு இடையே, இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார்.

ஆளுநர் ரவியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்கனவே ஆகஸ்ட் 1ஆம் தேதி டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவி நீட்டிப்பு உறுதி செய்யப்படாமல் ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை திரும்பினார்.
இப்படிப்பட்ட நிலையில் அவர் இன்று மாலை 5:10 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியுடன் டெல்லிக்கு புறப்பட உள்ளார். இந்த பயணத்தின் போது ஆளுநர் ரவி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனது பதவி நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் புதன்கிழமை சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.
தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. அண்ணாமலை வெளிநாட்டில் இருப்பதால் கட்சி நடத்த ஆள் தேவை.. கட்சியை வழிகாட்ட வேண்டும். 3 மாதங்கள் தலைவர் இல்லாமல் இருக்க முடியாது.. இதனால் ஒருவரை தற்காலிகமாக களமிறக்க வேண்டும். அல்லது நிரந்தரமாக களமிறக்க வேண்டும் என்று டெல்லி நினைக்கிறதாம். ஆனால் அதே சமயம் அண்ணாமலை மீதும் டெல்லிக்கு நன்மதிப்பு உள்ளது. இதற்கு இடையில் தான் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம், என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications