Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை சாலைகள் ஒரு நாள் மழைக்கே தாங்குவது இல்லையே ஏன்? தூய்மை பணியாளர்கள் உண்மையில் பாவம்!

ஒரு நாள் மழைக்கு கூட தாங்காமல் போன சென்னை சாலைகள்.. பயணிக்கவே முடியாத அளவுக்கு குளமாக மாறக்காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெயில் கொடுமையால் மக்கள் தவித்து வந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உண்டாகி நேற்று பலத்த மழை பெய்தது, தமிழ்நாட்டில் நேற்று முதல் 20-ந்தேதி வரையில் இடி-மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்த நிலையில் சொன்னபடியே சென்னையில் கனமழை பெய்தது.

சென்னை வெயில், மழை, வெயில், மழை என மாறிமாறி வானிலை நேற்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது. சென்னையின் மையப்பகுதிகளில் மழை மிதமாகவே இருந்தது.ஆனால் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தாழ்வான பகுதிகளில் குளம் போன்று மழை தண்ணீர் தேங்கியது. பலத்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏறபட்டது.

சென்னையில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்பட பல பகுதிகளில் மதியம் 12 மணிக்கு பிறகு இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் இந்த மழை நீடித்தது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.

அசோக் நகர்

அசோக் நகர்

இந்த திடீர் மழையால் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் பகுதியில் ஆலந்தூரில் இருந்து கிண்டி, அசோக் நகர் பகுதிகளுக்கு செல்லும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட நேர்ந்தது. ஆதம்பாக்கம் கக்கன் நகர் பகுதியில் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. கீழ்கட்டளை பகுதியில் மெட்ரோ ரெயில் பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் சூறை காற்றில் பறந்தது.

வெள்ளநீர்

வெள்ளநீர்

கிண்டி மடுவின்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் வண்டிக்காரன் தெரு, சிட்டி லிங்க் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தலைமைச்செயலக காலனி ஆகிய பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. கிண்டி வண்டிக்காரன் தெருவில் முழங்கால் வரை தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

எல்ஐசி நகர்

எல்ஐசி நகர்

மடிப்பாக்கத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் இருந்தது. இதனால் அந்த சாலைகள் எல்லாம் சேரும் சிகதியுமாக மாறியது. மடிப்பாக்கத்தில் பெரியார் நகர், எல்ஐசி நகர், உண்மை நகர் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் குளமாக சாலைகள் குளமாக மாறியது. பெரியார் நகர் பகுதியில் வாகனங்கள் செல்லவே முடியாத அளவிற்கு சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

புறநகர் பகுதிகள்

புறநகர் பகுதிகள்

ஒரு நாள் மழைக்கே சென்னையின் பல பகுதிகள் வெள்ளமாக மாறிக்கிடக்கின்றன.இதற்கு முக்கிய காரணம், வடிகால் வசதிகள் இல்லாதது தான். வடிகால் வசதிகள் என்பது சென்னையின் புறநகர் பகுதிகளில் இல்லை. புற்றீசல் போல் பெருகிய வீடுகள் சாக்கடை நீரையும், மழை நீரையும் வெளியேற்ற வழியில்லாமல் தவிக்கிறார்கள்.

பள்ளம் வெட்டி

பள்ளம் வெட்டி

மழைநீர்செல்வதற்காக வெட்டப்பட்ட வடிகால்களில் ஓட்டை போடப்பட்டிருக்கும், அதில் தான் மழை நீர் செல்லும். ஆனால் மழைநீர்செல்வதற்காக அமைக்கப்பட்ட ஓட்டைகள் பல இடங்களில் மூடிக்கிடப்பதால் தண்ணீர் போக வழியில்லாமல் குளமாக மாறிவிடுகிறது. அதேபோல் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகள் மழைநீர் சாலைகளில பெருக்கெடுக்க காரணமாக அமைகிறது. வெள்ளமாக மாறிய சாலைகளில் தூய்மை பணியாளர்கள் கடினமாக முயற்சி செய்து அவற்றை மோட்டார் வைத்தும், சாலைகளில் பள்ளத்தை வெட்டியும் வெளியேற்றுகிறார்கள்

சாலைகளில் தேங்குகின்றன

சாலைகளில் தேங்குகின்றன

ஆனால் சென்னையின் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் செல்ல இப்போது வரை சரியான வழிகள் இல்லை. அவை அந்த சாலைகளிலேயே பலநாட்கள் தேங்கி கிடக்கின்றன. வெயில் அடித்த பின்னர் படிப்படியாக குறைகின்றன. வடிகால் வசதி இல்லாத இடங்களில் உள்ள சாலைகள் தான் வடிகால்களாக மாறி குளமாகி விடுகின்றன. எனவே சென்னை புறநகர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வடிகால் வசதிகளை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+