தனியார் வங்கிகளில் மட்டும் வட்டி ஓவரா இருக்கே.. ஏன் தெரியுமா? உண்மையை போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும் போது மைக்ரோ பைனான்ஸ் வங்கிகள் வட்டி சற்று அதிகமாக இருக்கும். இந்த வேறுபாடு ஏன் மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் தொழிலுக்குக் கடன் வாங்கியே முதலீடு செய்வார்கள். அவர்களுக்கு வரும் வருமானத்தில் பெருமளவு குடும்ப செலவுக்கே போய்விடுவதால், தொழில் செய்யப் பெரிய தொகையை அவர்களால் முதலீடு செய்ய முடியாது.

 Why certain private banks are having high interest rates explains Anand Srinivasan

அதிலும் கொரோனாவுக்கு பிறகு இந்த நிலை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, பெரும்பாலும் சிறு குறு தொழில் செய்வோர் தனியார் வங்கிகளிலோ அல்லது மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளிலோ தான் கடன் வாங்கி முதலீடு செய்வார்கள்.

வங்கிகள்: ஆனால், எப்போதும் வங்கிகளில் கடனுக்குக் கேட்கும் வட்டியை விட இதுபோன்ற மைக்ரோ பைனான்ஸ் வங்கிகள் வட்டி சற்று அதிகமாக இருக்கும். ஆனாலும், வங்கிகளுக்குச் சென்றால் ஏகப்பட்ட டாக்குமெண்ட்டுகளை கேட்பார்கள். சொன்ன நேரத்தில் கடன் கிடைப்பதும் குதிரைக் கொம்பாகவே இருக்கும். இதனால் பலரும் இதுபோன்ற மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளில் தான் கடன் பெறுவார்கள்.

இரண்டுமே வங்கிகள் தான்... ஆனால் ஏன் மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளில் மட்டும் கடனுக்கு அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்று என்றைக்காவது உங்களுக்குக் கேள்வி வந்திருக்கும். அதற்கான பதிலைத் தான் ஆனந்த் சீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் விளக்கி இருக்கிறார். பொதுத் துறை வங்கிகளுக்கும் இதுபோன்ற மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளுக்கும் என்ன வேறுபாடு என்பதை விளக்கிய அவர், கடனுக்கான வட்டி ஏன் அதிகமாக இருக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.

"இனி தான் ஆட்டமே.." தங்கம் விலை எகிற போகுது.. ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க! எவ்வளவு அதிகரிக்கும்


என்ன காரணம்:
இது தொடர்பாக அவர் கூறுகையில், "எந்த வங்கியாக இருந்தாலும் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கும் கடன் பத்திரங்களை வைத்துள்ளவர்களுக்கும் தான் அதிக வட்டியைத் தர வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்கள் கொடுத்தவர்களிடமும் அதிக வட்டியை வசூலிப்பார்கள். கடன் கொடுக்கும் வட்டி விகிதம் குறைய வேண்டும் என்றால் டெபாசிட்களுக்கு வங்கி கொடுக்கும் வட்டியும் குறைய வேண்டும். டெபாசிட் மற்றும் கடன் பத்திரங்களின் வட்டி குறைக்கப்பட்டால்.. தற்போதைய சூழலில் யாருமே அதில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.

பொதுத்துறை வங்கிகள் யாருக்குக் கடன் தர மாட்டார்களோ அவர்களுக்கும் கூட இந்த மைக்ரோ பைனான்ஸ் வங்கிகள் கடன் கொடுக்கும்.. பொதுத் துறை வங்கிகளும் அவர்களுக்கு லோன் கொடுத்தால் கடனுக்கான வட்டி தானாகக் குறையும். ஆனால், பிரச்சினை என்னவென்றால் பொதுத்துறை நிறுவனங்கள் கொடுக்கும் கடனையே முறையாக வசூலிக்க மாட்டார்கள். வெளியே போய் வேலை செய்ய மாட்டார்கள். எனவே, அழுத்தம் இந்த பக்கம் வந்துவிடுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பொதுத்துறை வங்கிகள் லோன் தருவதில்லை. எனவே, மைக்ரோ பைனான்ஸ் இதுபோன்ற பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து குறைந்த வட்டிக்குக் கடனை வாங்கி மக்களுக்குச் சற்று அதிக வட்டிக்குக் கொடுக்கிறார்கள். இது ஒரு மார்கெட்டாக இருக்கிறது" என்றார்.

குறைய வாய்ப்பு இருக்கா:
அதாவது பொதுத் துறை வங்கிகளில் வட்டி குறைவாகவே இருக்கும் என்ற போதிலும்.. அங்கே கடன் வாங்குவது ரொம்பவே கஷ்டம்.. அதேநேரம் மைக்ரோ பைனான்ஸ் வங்கிகள் சற்று ரிஸ்க் எடுத்து அனைத்து தரப்பினருக்கும் கடனை தருகிறது. மேலும், அவர்கள் பெரியளவில் டாக்குமெண்ட்களையும் கேட்க மாட்டார்கள் என்பதால் பலரும் பைனான்ஸ் வங்கிகளில் தான் அதிகம் கடன் வாங்குகிறார்கள்.

அவர்கள் எடுக்கும் ரிஸ்க் காரணமாகவே கடனுக்கான வட்டியை அதிகமாக வசூலிக்கிறார்கள். ஏழை மக்களுக்குப் பல வங்கிகள் கடன் தந்தால் தான் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+