வெண்டிலேட்டர் நோயாளிகள் தப்பியது எப்படி? கிண்டி மருத்துவமனையில் மின்தடை ஏன்? சுகாதார செயலர் பதில்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 3 மணிநேரமாக மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில் மின்தடை ஏற்பட்டது ஏன்? நோயாளிகளை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் தற்போது 400க்கும் அதிகமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் மருத்துவமனையில் இன்று மாலை 6.45 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. மின்மாற்றியில் இருந்து மருத்துவமனைக்கு வரும் வயர் எரிந்தது மற்றும் மருத்துவமனையின் ஜெனரேட்டரில் வயர் எரிந்தது உள்ளிட்டவற்றால் மின்சாரம் உடனடியாக வழங்க முடியவில்லை.
இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இறுதியாக 3 மணிநேரம் கழித்து இரவு 10 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது.
முன்னதாக இதுபற்றி அறிந்தவுடன் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மீண்டும் மின்இணைப்பு வழங்கும் பணியை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் அவர் அறிவுரைகள் வழங்கினார்.
அதோடு மின்தடை மற்றும் நோயாளிகளை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மெயின் கேபிள் தீவிபத்து மருத்துவமனை மின்சாரத்துக்கான மின்சப்ளை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜெனரேட்டர் கேபிளும் எரிந்துள்ளது. அதனால் மருத்துவமனைக்கு மின்சாரம் தடைப்பட்டது. இந்த மருத்துவமனையில் 490 நோயாளிகள் உள்ளனர்.
இதில் 15 பேர் வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்தனர். அவர்களுக்கு தனியாக ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை செல்கிறது. அதில் எந்த பாதிப்பும் இல்லை. இப்போது வெண்டிலேட்டர் மற்றும் ஐசியூவில் உள்ள 15 நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்து கொள்வது தான் முதல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் நன்றாக உள்ளனர்.
இப்போது மெயின் மருத்துவமனைக்கான மின்சாரத்தை மீண்டும் வழங்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 மணிநேரத்தில் மெயின் லைன் வழியாக மருத்துவமனைக்கு மின்இணைப்பு என்பது வழங்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications