ஜோதிமணிக்கு வந்த துணிச்சலை பார்த்தீங்களா.. "மட்டன், ஹிஜாப்".. டக்கென திரும்பிய பாஜகவினர்..!
பாஜக ஆட்சியை விமர்சித்து ஜோதிமணி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்தது இங்கும் நடக்கும் என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ள கருத்துக்கு, பாஜகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது... உலகம் முழுக்க கடன்களை வாங்கிக் குவித்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள், சொந்த நாட்டு மக்களிடமிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.
உலகமெல்லாம் வாங்கி முடித்துவிட்டு, இப்போது கடன்களை அடைக்க இந்தியாவிடம் கடன் வாங்க ஆரம்பித்துள்ளனர்...

விழிபிதுங்கிய மக்கள்
எனினும், பொருளாதார சீர்குலைவால் இலங்கையில் பணவீக்கம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது... விலைவாசி விண்ணை எட்டிவிட்டது.. மக்கள் விழிபிதுங்கி தவிக்கிறார்கள்.. நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களும் நடந்து வருகின்றன. தினம் தினம் கலவரமாக அங்கு நடந்து வருகிறது.. ஆட்சியாளர்களுக்கும் எதிராக களத்தில் குதித்துள்ள மக்கள், அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலகவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. ஆனால் ஒடுக்கப்பார்த்த அரசின் எல்லா முயற்சிகளும் படு தோல்வியிலேயே முடிந்துள்ளன.

பாஜக அரசு
இப்படிப்பட்ட நிலைமை கண்டிப்பாக இந்தியாவிலும் வரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.. காரணம், மதத்தை வைத்து சிலர் மக்களிடையே தொடர்ந்து பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகள் வெடிக்கும் என்று அறுதியிட்டு சொல்கிறார்கள்.. இப்போதே இந்தியாவில் பொருளாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது என்றும், அதை மறைக்கவே மதத்தை வைத்து அரசியல் செய்யும் முயற்சி நடப்பதாகவும், குற்றச்சாட்டுகள் வெடித்து கொண்டிருக்கின்றன.

பெட்ரோல் டீசல்
நாளுக்கு நாள் உயரும் விலைவாசி, பெட்ரோல் டீசல் உயர்வு, கேஸ் விலை உயர்வு, சுங்கக்கடட்டணம் உயர்வு என்ற விலைவாசிகளை பார்த்து மிரண்டு போயுள்ளனர்.. இதுபோதாமல், ஹிஜாப் விவகாரம், மசூதிகளில் பாங்கு ஒலிக்கும் ஒலிபெருக்கிகளுக்கு தடை, அசைவம் சாப்பிடகூடாது, போன்ற மத விஷயங்களையும் பார்த்து கடுமையான அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஜோதிமணி ஒரு ட்விட் போட்டுள்ளார்..

மட்டன் - சிக்கன்
அதில், "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப், அசைவ உணவு தடை போன்ற மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறது. இதே மத, இனவாத அரசியல்தான் இலங்கை மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடச் செய்திருக்கிறது. அதுவே இங்கும் நடக்கும்" என்று ஜோதிமணி எச்சரித்துள்ளார். ஜோதிமணி சொன்ன இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்..

பாஜக கேள்வி
பலரும் இந்த ட்வீட்டை ஆமோதித்து தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.... ஆனால் பாஜகவினரோ, ஜோதிமணியின், திமுக அரசு சொத்து வரியை உயர்த்தி இருக்காங்களே.. அதை பற்றியும் சொல்லுங்க.. ஏன் அமைதியாக இருக்கறீங்க?" என்று பதில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் ஜோதிமணி ட்விட்டரே படுபிஸியாக காணப்படுகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications