கையை விட்டு.. கண் முன் போன பவர்.. அண்ணாமலைக்கு நேர்ந்த அந்த சம்பவம்.. பாஜகவில் இமாலய ட்விஸ்ட்
சென்னை: அதிமுக - பாஜக மோதல் குறித்து ரிப்போர்ட் கொடுப்பதற்காக மத்திய அமைச்சர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதுதான் தற்போது அண்ணாமலைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே தமிழ்நாட்டில் வேறு பாஜக தலைவர்கள் பக்கம் பெரிதாக போகஸ் செல்ல விட்டது இல்லை. தலைவர் என்ற வகையில் தனக்கு மட்டுமே போகஸ் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
அதில் தவறும் இல்லை. அதற்கான பணிகளையும் செய்தார். தன்னை மதிக்காமல் நடந்தவர்களை நீக்கவும் அவர் துணிந்தார். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் முக்கியமான பவர் ஒன்று அவரை விட்டு சென்றுள்ளது. அவரே எதிர்பார்க்காமல் முதல்முறை டெல்லி பாஜக அவருக்கு எதிராகவே ஒரு ஆக்சன் எடுத்துள்ளது.

மோதல்: அதிமுக பாஜக உச்சத்தில் உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள் காரணமாக அவருடன் உறவை முறித்துக்கொண்டு அதிமுக வெளியேறி உள்ளது. பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
( அவசரம்.. கிளம்பி வாங்க! டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை.. அதிமுக முடிவால்.. அரண்டு போன பாஜக? )
அதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது என்று நேரடியாக எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை மீது குற்றச்சாட்டு வைத்து கூட்டணியை முறித்து உள்ளார்
என்ன நடக்கும்?: இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையின் முக்கியமான பவர் ஒன்று போய் உள்ளது. அதன்படி பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக - பாஜக உறவு, இந்த உறவு முறிய காரணம் என்ன என்று ரிப்போர்ட் அளிக்கும்படி மத்திய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டை சேர்ந்தவரும்.. மத்திய அமைச்சராக இருப்பவருமான் பெண் அமைச்சர் ஒருவர் தமிழ்நாடு கூட்டணி மோதல் பற்றி ரிப்போர்ட் ஒன்றை டெல்லிக்கு அனுப்ப உள்ளாராம். பாஜகவின் செயற்பாடு எப்படி? அதிமுக செயல்பாடு எப்படி? கூட்டணி முறிந்தால் யாருக்கு பிரச்சனை? கூட்டணி முறிவிற்கு யார் காரணம்? இதை சரி செய்ய வேண்டும்? எப்படி சரி செய்ய வேண்டும்? என்பதை லிஸ்ட் போட்டு டெல்லிக்கு அனுப்ப உள்ளாராம்.
பொதுவாக மாநில தலைவர்தான் இந்த பணிகளை செய்ய வேண்டும். ஆனால் மாநில தலைவரிடம் இருக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு மாநில தலைவரிடம் இருந்து அந்த அதிகாரம் தற்போது மத்திய அமைச்சர் ஒருவரிடம் அளிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications