டெல்லிக்கு வாங்க.. உடனே! உதயநிதி ஸ்டாலினுக்கு போன அழைப்பு.. அதுவும் அவரா? பெரிய ட்விஸ்ட்
சென்னை: லோக்சபா தேர்தல் 2024 தீவிரம் அடைந்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அழைப்பு ஒன்று டெல்லியில் இருந்து வந்துள்ளதாம்.
லோக்சபா தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்கு இடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை தேசிய அரசியலை புரட்டி போட்டு உள்ளது.

50 நாட்கள் சிறையில் இருந்தபின், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெயிலில் வந்துள்ள அவர் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களின் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில்மேலும் நான்கு சுற்றுகள் நடைபெற உள்ளன. இன்று 4ம் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ல் மீதமுள்ள தேர்தல்கள் நடக்க உள்ளன.
கெஜ்ரிவால் திட்டம்; இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கூட்டணி தலைவர்களை டெல்லிக்கு அழைக்கும் திட்டத்தில் கெஜ்ரிவால் இருக்கிறாராம். கெஜ்ரிவால் வருகை காரணமாக இந்தியா கூட்டணி வலிமை அடைந்துள்ளது. அதோடு மோடிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பாக கெஜ்ரிவால் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
இந்திய கூட்டணி தலைவர்கள் சிலர் கெஜ்ரிவாலை சந்தித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் இந்திய கூட்டணி தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் கூட்ட வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு இடையில் இவர்களின் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அழைக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு: அதன் ஒரு கட்டமாக லோக்சபா தேர்தல் 2024 தீவிரம் அடைந்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அழைப்பு ஒன்று டெல்லியில் இருந்து வந்துள்ளதாம்.
உதயநிதி ஸ்டாலின் இரண்டு வாரமாக லண்டனில் இருந்தார். தேர்தலுக்கு பின் குடும்பத்தோடு பயணம் மேற்கொண்டார். வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய கையோடு, தனது துறை சார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. மற்ற மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருவதால், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் இருந்தாலும் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்பதால் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தடை இல்லை: திரும்பி வந்த உதயநிதி ஸ்டாலின் கோட்டைக்கு செல்லாமல் தனது தந்தை ஸ்டாலின் பாணியில் தவிர்த்து வருகிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், தலைமைச் செயலகத்துக்குச் செல்ல எந்த தடையும் இல்லை என்றாலும், தேவையற்ற விமர்சனங்கள் உருவாக வேண்டாம் என நினைத்தே கோட்டைக்கு உதயநிதி செல்லவில்லையாம்.
ஆனால், துறை சார்ந்த பணிகள் எப்படி நகர்கிறது என்பதை அதிகாரிகளை தொடர்புகொண்டு விவாதிக்கிறார். அடிக்கடி கட்சி ரீதியாக போன வழியாக ஆலோசனையும் செய்கிறார் .
தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார் என்று சொல்கிறது விளையாட்டுத்துறை வட்டாரங்கள். இந்த நிலையில்தான் டெல்லியில் பிரச்சாரம் செய்ய உதயநிதியை அழைத்துள்ளதாம் ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு பிரிவு. ஆனால், டெல்லி செல்வது குறித்து எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை என்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications