ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு.. மாட்டு இறைச்சி உண்ணும் பிரபல நடிகருக்கு அழைப்பு.. பெரும் சர்ச்சை
சென்னை: மாட்டு இறைச்சி உண்ணும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் தம்பதிகள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அழைப்பு வந்துள்ளது. இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் பகிர்ந்த அறிக்கையின்படி, ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இந்த நடிகர்கள் கலந்து கொள்வார்கள்.
ஸ்ரீ சுனில் அம்பேகர், ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரச்சார் நிர்வாகி; ஸ்ரீ அஜய் முட்பே, பிரந்த் பிரச்சார் நிர்வாகி, ஆர்எஸ்எஸ் கொள்கை பரப்பு செயலாளர் மஹாவீர் ஜெயின் ஆகியோர் ஆலியாவையும் ரன்பீரையும் சந்தித்து ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீ ராமஜென்மபூமி மந்திர் பிரான்பிரதிஷ்தா விழாவிற்கு அழைத்துள்ளனர்.
ரஜினி அழைப்பு: சில நாட்களுக்கு முன்பு, மூத்த நடிகர் ரஜினிகாந்த் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பை தனிப்பட்ட முறையில் பெற்றார்.
ரஜினிகாந்த், ஆலியா, ரன்பீர் மற்றும் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், சன்னி தியோல், பிரபாஸ், மாதுரி தீட்சித், அனுபம் கெர் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட பிற நடிகர்களும் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று உத்தர பிரதேச வட்டாரங்கள் முன்பு தெரிவித்துள்ளன.
மாட்டு இறைச்சி: மாட்டு இறைச்சி உண்ணும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது. நான் அதிக அளவில் மாட்டு இறைச்சி சாப்பிடுவேன் என்று ரன்பீர் கூறும் பழைய வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது.
அப்படிப்பட்டவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பது ஏன் என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
மோடி கலந்து கொள்கிறார்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
Beef eater Ranbir invited to Prabhu Shri Ram Temple opening ceremony. Hawwww!!!!! 😳 Tauba Tauba!! pic.twitter.com/TOZt97jYbq https://t.co/NSRPEoFEZh
— Alok Shinde (@alokshinde) January 7, 2024
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications