மிக்ஜாம் வருது! அதிகாலையே போனை போட்ட ஸ்டாலின்! 6 மணியிலிருந்து கலெக்டர்களுக்கு தனித்தனியாக கால்! ஏன்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாலையிலே மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு போன் செய்து பேசி உள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று மிக்ஜாம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முழுமையாக நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கையில், அமைச்சர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் கழக நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்டாலின் கோரிக்கை: அதில், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் - மாண்புமிகு அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து - மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
( நெருங்கி வரும் மிக்ஜாம் புயல்.. தப்பித்தவறி கூட இதை பண்ணாதீங்க.. அரசு வெளியிட்ட வார்னிங்.. முக்கியம்)
மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும் - ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
போனை போட்ட ஸ்டாலின்: இந்த புயலுக்கு இடையே முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுக்கு போன் செய்தார். 6 மணியில் இருந்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனி தனியாக போன் செய்தார். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தொடங்கி கடலோர மாவட்டங்களில் இருக்கும் எல்லா ஆட்சியர்களுக்கும் அடுத்தடுத்து போன் செய்தார்.

அவர்களின் மாவட்டத்தில் மழை நிலவரத்தை கேட்டவர்.. அதன்பின் புயலுக்கு தயார் நிலையில் இருப்பது, தற்காலிக தங்கும் இடங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனி தனியாக ஆலோசனை செய்தார். பொதுவாக முதல்வர்கள் டீம் மீட்டிங் போல மொத்தமாக பேசுவது உண்டு. ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலின் புயலின் தீவிரம் கருதி தனி தனியாக ஆட்சியர்களிடம் பேசி உள்ளார். மாவட்ட நிர்வாகம் புயலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று தனி தனியாக ஆட்சியர்களிடம் பேசி உள்ளார்.
புயல் எங்கே உள்ளது: புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கு திசையில் சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. 7 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 33 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது என்று வானிலை ஆய்வும மையம் தேபிவித்துள்ளது.
சென்னைக்கு அருகே புயல்: மிக்ஜாம் இன்று புயலாக உருவெடுக்கும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.
இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயத்தால் பெரும்பாலும் சென்னை அல்லது தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 5ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications