என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ஸ்டாலினை கோபப்படுத்திய "நம்பர் 17".. ஜூமில் நடந்த பரபரப்பு.. சிவந்த கண்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான டாஸ்க் ஒன்றிய முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று ஜூம் கால் மூலம் நடைபெற்றது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மீட்டிங் நடந்தது.

திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் கண்டிப்புடன் பேசி உள்ளார்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஜும் மீட்டிங்கில் நடந்தது என்ன?
இந்த மீட்டிங்கில் ஸ்டாலின் தொடக்கத்தில் இருந்தே கோபமாக காணப்பட்டார்.
முதலில் கையில் இருந்த 17 மாவட்டங்களின் லிஸ்ட் ஒன்றை படித்தார். அதில் உள்ளவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்று அட்டென்டன்ஸ் எடுத்தார்.
நான் சொன்ன லிஸ்டில் இருப்பவர்கள் மட்டும் எனக்கு பதில் சொல்லுங்கள். அவர்களுக்காகவே இந்த மீட்டிங். நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று கூறினார்.
மற்றவர்களை பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கும்படி முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
அதன்பின் வரிசையாக அவர்களிடம் ஏன் இன்னும் பூத் கமிட்டியை அமைக்கவில்லை, கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்.
முக்கியமாக நாம் 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை.
நீங்கள் 17 மாவட்டங்களில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு கடைசி வார்னிங். புதிய பூத் கமிட்டியை உடனே அமையுங்கள். அதோடு உடனே பூத் கமிட்டியை அமையுங்கள் என்று கூறி உள்ளார்.
அமைச்சர்கள் + மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்களிடம் ஸ்டாலின் கண்டிப்பு காட்டி உள்ளார். அமைச்சர் மா. சு எங்கே என்று மீட்டிங்கில் கேட்க.. மீட்டிங்கில் இல்லையா.. அவர் வெளிநாட்டில் இருப்பதால் மீட்டிங் நேரத்திற்கு வர முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலினிடம் நிர்வாகிகள் பதில் சொல்லி உள்ளனர் .
இதையடுத்து இன்னும் சில அமைச்சர்களிடம் கண்டிப்பாக பேசி ஸ்டாலின்.. அதன்பின் லோக்சபா தேர்தலுக்கு உட்கட்சி சர்வே எடுக்க வேண்டும்.எம்பிக்கள் செயல்பாடு எப்படி உள்ளது.. யாரை மீண்டும் நிற்க வைக்கலாம்.. புதியவர்கள் தேவையா.. ஏற்கனவே இருப்பவர்களை மீண்டும் களமிறக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.
கண்டிப்பு - அதிரடி
2 ஆண்டுகள் முடிந்து 3ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த நிலையில் ஸ்டாலின் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் அவர் மாற்றங்களை செய்தார்.
தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications