செஸ் காயின்ல எதுக்குங்க சிலுவை வச்சாங்க? ராஜா டிசைனை மாத்தணும் - ஒரே போடாகப் போட்ட அர்ஜூன் சம்பத்!
சென்னை : செஸ் காயினில் ராஜாவிற்கு சிலுவை வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று முடிந்துள்ளன. தமிழக அரசின் மிகச் சிறப்பான ஏற்பாட்டில் இந்தப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நமது ஒன் இந்தியா செய்தித் தளத்திற்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், செஸ்ஸில் ராஜாவிற்கு சிலுவை எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முகப்புப் படம்
ஒன் இந்தியா தளத்திற்குப் பேட்டியளித்த அர்ஜூன் சம்பத் பேசுகையில், "சமூக ஊடகங்களில் தங்களது முகப்புப் படமாக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். எல்லா மாநிலங்களிலும் முதல்வர்கள் தேசியக் கொடி வைத்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி தேசியக் கொடியேற்றிவிட்டு கீழே வருவது போன்ற புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார். திமுகவோ, கருணாநிதியோ சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது போன்றும், தேசியக்கொடி ஏற்றும் உரிமையே இவர்கள் வாங்கிக் கொடுத்தது போன்றும் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

தவறான முன்னுதாரணம்
இது தவறான முன்னுதாரணம். இதிலும் திராவிடத் திணிப்பையும், குடும்ப அரசியல் திணிப்பையும் காட்டியுள்ளனர். எங்க அப்பாதான் இதையெல்லாம் செய்தார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?. முதல்வர் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும். ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோதே தேசியக் கோடி ஏற்றினார். அதையெல்லாம் மறைத்து கருணாநிதி தான் இந்த உரிமையைப் பெற்றுத் தந்ததாக பொய் சொல்கிறார்கள்.

இந்துக்கள் குறி
தொடர்ந்து குறி வைத்து இந்துக் கோயில்களின் முன்பு மட்டுமே ஈ.வெ.ரா சிலையை வைத்து குதர்க்கம் செய்கிறார்கள். கனல் கண்ணன் வன்முறையைத் தூண்டும் வகையில் எல்லாம் பேசவில்லை. ஏன் உள்நோக்கத்தோடு கோவில் முன்பு மட்டும் பெரியார் சிலையை வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அவர் சாதாரணமாகப் பேசியதை குய்யோ முறையோவென்று கத்தி பெரிய விஷயமாக்கி பொய் வழக்கு போட்டு விட்டார்கள்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் காயின் குதிரைக்கு 'தம்பி' என பெயர் வைத்து விளம்பரம் செய்ததைப் போல, செஸ் காயின் ராஜாவுக்கு சிலுவையை வைத்திருக்கிறார்கள். கிறித்தவ நாடுகள் சேவையின் அடையாளமாக சிலுவையை வைத்திருக்கலாம். ஆனால், இங்கு அது ஒரு மதக் குறியீடு. செஸ் காயினை மாற்றச் சொல்லி செஸ் ஒலிம்பியாட் கமிட்டிக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். ராஜா காயினில் இருக்கும் சிலுவை நீக்கிவிட்டு வேறு ஏதாவது டிசைன் வைக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
நரித்தனம்
மேலும் தனது ட்விட்டர் பக்கத்திலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள அர்ஜூன் சம்பத், "செஸ் காயின்களில் குறிப்பாக ராஜாவின் அடையாளமாக ஏன் சிலுவை வந்தது! சிவன் காலம்தொட்டே ஆடப்படும் ஆட்டத்தில் எப்படி ராஜாவின் அடையாளமாக சிலுவை வந்தது? மிஷனரிகளின் நரித்தனமான வேலையே இது!" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications