Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிராமணர்கள்".. மிஸ்டர் ஆர்.எஸ்.பாரதி.. சீறிய நாராயணன்.. "சரி, அந்த சங்கர்ராமன்".. வெகுண்ட விசிக

நாராயணன் திருப்பதிக்கு விசிகவின் வன்னயரசு கேள்வி கேட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்எஸ் பாரதி பற்ற வைத்த தீயானது, பாஜகவில் கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், அது தொடர்பாக விசிகவும் தன் பங்குக்கு கேள்வி எழுப்பி பாஜகவை திணறடித்து வருகிறது.

தமிழக பாஜக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது.. ஆர்ப்பாட்டம், போராட்டம் அறிவிக்கிறது.. சவால் விடுகிறது.. ஊழல் புகார்களை வெளியிட்டு வருகிறது.

ஆரம்பத்தில், அண்ணாமலையை கண்டுகொள்ளாமல் விட்ட, திமுகவும், அதிமுகவும் தற்போது எதிர்வினையாற்றி வருகிறார்கள். தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதை மக்கள் மனதில் அழுத்தி புரியவைக்க, அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் பேட்டி தந்து கொண்டிருக்கிறார்கள்.

 நாசர் - பாஜக தலைவர்கள்

நாசர் - பாஜக தலைவர்கள்

அதுபோல, திமுகவிலும் 2ம் கட்ட தலைவர்கள் பதிலடி தந்து வருகிறார்கள்.. குறிப்பாக, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், முத்துசாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு தினமும் பதிலடி கொடுத்து வருகின்றனர்... அந்த வகையில், திமுகவின் மூத்தத் தலைவர் ஆர்எஸ் பாரதி ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து பேசியிருந்தார்.

 ஜாதகம் மோசமானது

ஜாதகம் மோசமானது

"நான் கேஸ் போட்டா நீ உள்ளே போக வேண்டியது வரும்... என் ஜாதகம் ரொம்ப மோசமானது... ஏதோ நம்ம பையன் சின்னப் பையன் என்பதற்காக விட்டு வைத்திருக்கிறோம்" என்று எச்சரித்திருந்தார்.. உடனே அண்ணாமலை இதற்கு பதிலடி தந்திருந்தார்.. "இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை, ஆர்.எஸ் பாரதி அவர்களே.. மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.. ஆதலால் சாதி வெறுப்பைத் விதைப்பதற்கு முயற்சி செய்து, காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாவம்! இது 1967 அல்ல!" என்று காட்டமாக ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

 கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார்

ஆர்எஸ் பாரதி இவ்வாறு அண்ணாமலையை எச்சரிப்பது முதல் முறை கிடையாது.. "கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட கதி தான் அண்ணாமலைக்கும் ஏற்படும்... இதே மாதிரி, பேசிக் கொண்டிருந்தால் இனி நடமாட முடியாது.. எங்கேயும் போய் பேசவும் முடியாது" ஆர்எஸ் பாரதி ஏற்கனவே ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.. அதனால்தான் பாஜக தரப்பு கொந்தளித்து போயுள்ளது.

 மோசமான ஜாதகம்

மோசமான ஜாதகம்

இதற்கு தமிழக பாஜகவின் நாராயணன் திருப்பதி, பல கேள்விகளை திமுகவிடம் எழுப்பினார்.. "என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய். சின்ன பையன் என்பதால் அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறேன். பிராமணர் அல்லாத தலைவராக இருப்பதால் அந்த உணர்வின் காரணமாக அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறோம்.
கூட இருந்தே குழி தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள் பிராமணர்கள்" : என்கிறார் ஆர் எஸ் பாரதி.

 பிராமணர்கள்

பிராமணர்கள்

உங்கள் ஜாதகம் மோசமான ஜாதகம் தான் ஆர்எஸ். பாரதி அவர்களே.. தள்ளாத வயதில் விரைவில் சிறைக்கு செல்ல தயாராகுங்கள். அண்ணாமலை சின்னப்பையன் அல்ல சிங்கத்தலைவன்.. திமுக என்ற குள்ள நரியை ஓட ஓட விரட்ட வந்த சிங்கம். அதனால் தான் திமுகவினர் கொலை மிரட்டல்கள் விடுக்கின்றனர். பிராமணர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தொடர்ந்து அந்த சமுதாயத்தை தாக்கும் திமுக கோழைகளே, தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் அண்ணாமலையின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து பாருங்கள்... போனால் போகிறது என்று உங்களை பாஜக தான் விட்டு வைத்திருக்கிறது. ஒரு சாதியை இழிவுபடுத்தும் கேடுகெட்ட அரசியலை கைவிடுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்" என்று நாராயணன் திருப்பதி சரமாரியாக விமர்சித்து கேள்வி கேட்டிருந்தார்.

 ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

இந்த விவகாரம் ஆர்எஸ் பாரதி & பாஜகவுடன் முடியவில்லை.. இன்றைய தினம் விசிக என்ட்ரி தந்துள்ளது.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில் திருப்பதி நாராயணனுக்கு பதிலடியும் தந்துள்ளார்.. அந்த ட்வீட்டில், "பிராமணர்கள் அப்பாவிகள் என கட்டமைக்க முயலாதீர்... விடுதலை இந்தியாவின் முதல் பயங்கரவாத படுகொலையை செய்தது சித்பவன் பார்ப்பனரான கோட்சே தான்.. வைசியரான காந்தியை போட்டுத்தள்ளி விட்டு இப்போது அப்பாவி வேடமிடுவது ஏன்? சங்கர்ராமன் அய்யங்கார் படுகொலையில் சிறைக்குப்போனதும் பார்ப்பனர் தானே?" என்று வன்னியரசு கேள்வி கேட்டுள்ளார்.

சிறுத்தைகள்

சிறுத்தைகள்

வன்னியரசு போட்ட ட்விட்டுக்கு ஏராளமான சிறுத்தைகள் திரண்டு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. மற்றொருபுறம் வன்னியரசுக்கு சிலர் பதிலடியும் தந்து கொண்டுள்ளனர்.. குறிப்பாக, "இந்தியாவில் நடந்த கொலைகளை செய்தவர்களின் சாதி அடிப்படையில் ஒரு பட்டியல் தயார் செய்வோமா? Topper யாருனு பாப்போமா? என்று வினா எழுப்புகிறார்கள்..

 சங்கர்ராமன்

சங்கர்ராமன்

மேலும் சிலர், என்னது சங்கர்ராமன் ஐய்யங்காரா? அல்லது ஐயரா? ஆனால், கோட்சே செய்தது தவறு... ஆனால், கோட்சே ஓடி ஒளியவில்லை என்றும், சங்கர்ராமன் கொலை வழக்கில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.. ஒரு சாதி முழுமையும் இப்படித்தான் என்று முடிவு செய்யாதீர்கள்.. அப்பாவின்னு முதலில் நாங்கள் கூறிக் கொள்ள மாட்டோம். பறையர் என்று குறிப்பிட்டார் என கேஸ் போட முயல்வது போல், பார்ப்பான் என்றால் கேஸ் போடுவோம் என பயம் காட்ட மாட்டோம் என்று பதிவிட்டு வருகின்றனர்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+