சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரம்மி.. "ஆபிஸ் உள்ளேயே வராதீங்க".. ஆர்என் ரவியின் ஒன்றரை மாத மௌனம்! என்ன நடந்தது? விளாசும் லட்சுமணன்

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாதது குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஒன் இந்தியா தமிழ் அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி முன் மொத்தம் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் ஆன்லைன் தடைக்கான சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் இதற்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் காலாவதியாகி இருக்கிறது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு அதன்பின் அவசர சட்டசமாக கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டசபையிலும் இது நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது. தமிழ்நாடு அரசு இது தொடர்பாக ஆளுநருக்கு விளக்கம் அளித்தும் கூட ஆளுநர் ஆர். என் ரவி மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை.

அவசர சட்டத்துக்கு அவசரம் காட்டாத ஆளுநர்.. நடிகர்கள் காட்டிய ஆசை! ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு மரணம் அவசர சட்டத்துக்கு அவசரம் காட்டாத ஆளுநர்.. நடிகர்கள் காட்டிய ஆசை! ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு மரணம்

தடை சட்டம்

தடை சட்டம்

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாதது குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஒன் இந்தியா தமிழ் அரசியல் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இதை பற்றி கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த ஆன்லைன் ரம்மி ஒரு போதை. இதனால் பலரின் உயிர் போகிறது, பல குடும்பங்கள் நாசம் ஆகிறது, அதனால் இதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி துணிச்சலாக இந்த முடிவை எடுத்தார். அதை பாராட்டித்தான் ஆக வேண்டும். அதன்பின் தேர்தல் வந்தது. ஆகஸ்ட் 2021ல் எடப்பாடி கொண்டு வந்த சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அவசர அவசரமாக சட்டம் இயற்றியதால் இந்த தடை சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன அதை சரி செய்யுங்கள் என்று கூறப்பட்டது.

மாநில அரசு

மாநில அரசு

மற்றபடி மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் நீதிமன்றம் கூறவில்லை. அதன்பின் 10 மாதங்கள் திமுக இதில் மௌனம் காத்தது. இதை நானே கேள்வி எழுப்பி இருந்தேன். 10 மாதங்கள் ஏன் இதில் அவர்கள் ஆய்வுகளை செய்தனர். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை ஒருவாரத்தில் சரி செய்து இருக்கலாம். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் இவர்கள் குழுவை மறு வாரமே அமைத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. விமர்சனம் எல்லாம் இருக்கட்டும். கடந்த செப்டம்பர் மாதம் அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்து, அக்டோபர் மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தனர். அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார் மறுக்கவில்லை.

மசோதா

மசோதா

ஆனால் அதே அவசர சட்டத்தை சட்ட மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியும் கூட ஆளுநர் ஒன்றரை மாதமாக மௌனமாக இருக்கிறார் என்பதுதான் விமர்சனத்தை சந்தித்து உள்ளது. அவர் கேட்ட கேள்விகளை 1 வாரத்தில் கேட்டு இருக்கலாம். ஆனால் ஏன் அவரும் தாமதம் செய்தார். பலியாகும் உயிர்களை பற்றி அவர் யோசித்து இருக்க வேண்டும். வழக்கறிஞர் கருத்துக்களை கேட்டு உடனே அவர் முடிவு எடுத்து இருக்கலாம். ஒன்றரை மாதம் பின் அவர் இப்படி கருத்து கேட்டது தவறு. கடைசி நாளில்தான் ஆன்லைன் ரம்மி காரணமாக ஒரு பெண் சாகிறார். ஆனால் அதற்கு கூட ஆளுநர் மனம் இறங்கவில்லை. அவர் 3 கேள்விகளை கேட்கிறார்.

Recommended Video

    EPS இந்த ஜென்மத்துல BJP-யை எதிர்க்க மாட்டார் - S.P. Lakshmanan | Oneindia Arasiyal
    உயர் நீதிமன்றம்

    உயர் நீதிமன்றம்

    உயர் நீதிமன்றம் முன் வைத்த கேள்விகளை, ஓட்டைகளை, மாநில அரசு அதிகாரம் தொடர்பானது, விளையாட்டுக்கு விதிக்கப்படும் தடைகள் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்தது. ஆன்லைன் கேம்களை மட்டுமே தடை செய்கிறோம், நேருக்கு நேரு ஆடுவதை தடை செய்யவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறியது. ஆனால் ஆளுநர் முடிவு எடுக்காமல் மௌனமாக இருந்தார். இந்த மௌனம் கள்ள மௌனம், ஆபத்தான மௌனம், சந்தேகத்திற்கு உரிய மௌனம். ஏனென்றால் ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நிறுவனம் அல்ல. 3- 4 பேர் இந்திய அளவில் பெரிதாக நடத்துகிறார்கள்.

    பெரும் முதலைகள்

    பெரும் முதலைகள்

    எல்லாம் பெரும் முதலைகள். உதாரணமாக நவம்பர் 16ம் தேதி ஆன்லைன் ரம்மியை நடத்தும் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். அவர்கள் சார்பாக மிகப்பெரிய வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எல்லோரும் ஆஜர் ஆனார்கள். அரிமா சுந்தரம், முகுல் ரோத்தகி போன்றவர்களை ஆஜர் படுத்தினர். இவர்களுக்கு எதிராக கபில் சிபில் போன்ற வலிமையான வழக்கறிஞரை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. ரம்மி நிறுவனம் வைத்த கோரிக்கை, இந்த அவசர சட்டத்திற்கு தடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

    வழக்கு

    வழக்கு

    அப்போது கபில் சிபல் வைத்த வாதத்தில், இந்த சட்டம் இன்னும் அமலுக்கே வரவில்லை. ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இதற்கு எதிராக இப்போதே வழக்கு தொடுக்க கூடாது என்றார். வேறு மாதிரியான வாதத்தை வைக்க முடியாது. இந்த பாயிண்டை பிடித்துக்கொண்ட ஆன்லைன் நிறுவனங்கள், அப்படி என்றால் எங்களை அரசு தொந்தரவு செய்ய கூடாது. எங்கள் ஆபிஸ் உள்ளேயே வர கூடாது. எங்களை தடுக்க கூடாது என்று பிரஷர் கொடுத்தனர். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று அவர்கள் வாதம் வைத்தது ஆளுநருக்கும் தெரியும்.

    ஆபிஸ் உள்ளே வராதீர்கள்

    ஆபிஸ் உள்ளே வராதீர்கள்

    ஏனென்றால் சங்ககால வரலாற்றை தப்பும் , தவறுமாக பேசும் ஆளுநர் தன் கண் முன் நடக்கும் வழக்கு வாதத்தை கேட்காமல் இருந்திருக்க மாட்டார். தன் கையில் இருக்கும் சட்ட மசோதா பற்றிய வழக்கில் என்ன நடக்கிறது என்று அவரும் கண்காணித்துக்கொண்டுதான் இருந்திருப்பார். ஆனால் ஆளுநர் எதை பற்றியும் கவலை படவில்லை. எங்களை தொடாதே என்று ரம்மி நிறுவனங்கள் சொல்லும் போது ஆளுனர் மனிதாபிமானத்தோடு தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.

    என்ன கொடுமை?

    என்ன கொடுமை?

    ஆளுநர் இதில் அரசியல் செய்தால் காலம் அவரை மன்னிக்காது. அண்ணாமலை பேட்டி எல்லாம் ஏமாற்றும் வேலை. அவசர சட்டத்திற்கு ஜிஓ போட சொல்கிறார். அவரின் முதிர்ச்சியற்ற பேச்சு. அதுதான் கேசட்டில் வந்துவிட்டதே? மொபைலில் கூட கேமை தடை செய்து இருந்தனர். நான் செக் செய்தேன். ஆனால் அண்ணாமலை தவறாக சொல்கிறார். அண்ணாமலை கேம் ஆடினார் என்றால்.. அவர் எந்த சாப்ட்வேர் பயன்படுத்தினார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். மக்களை அண்ணாமலை திசை திருப்ப கூடாது. ஆளுநர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும். மக்கள் உயிரோடு ஆளுநரும், அண்ணாமலையும் விளையாட கூடாது.

    தவறு

    தவறு

    ஆளுநர் இதில் அரசியல் காலம் அவரை மன்னிக்காது. அண்ணாமலை பேட்டி எல்லாம் ஏமாற்றும் வேலை. அவசர சட்டத்திற்கு ஜிஓ போட சொல்கிறார். அவரின் முதிர்ச்சியற்ற பேச்சு. அதுதான் கேசட்டில் வந்துவிட்டதே? மொபைலில் கூட கேமை தடை செய்து இருந்தனர். நான் செக் செய்தேன். ஆனால் அண்ணாமலை தவறாக சொல்கிறார். அண்ணாமலை கேம் ஆடினார் என்றால்.. அவர் எந்த சாப்ட்வேர் பயன்படுத்தினார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். மக்களை அண்ணாமலை திசை திருப்ப கூடாது. ஆளுநர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும். மக்கள் உயிரோடு ஆளுநரும், அண்ணாமலையும் விளையாட கூடாது.

    English summary
    Why did Governor RN Ravi not allow the Online Rummy Ban law? S.P. Lakshmanan interview to Oneindia Arasiyal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X