என்னது ஸ்டாலின் கலந்து கொண்ட மீட்டிங்கிற்கு பிடிஆர் வரவில்லையா? மேட்டரே வேறயாம்.. நடந்தது என்ன?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை என்று தேவையில்லாத சர்ச்சை ஒன்று இணையத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தற்போது மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னணிப் பாடகர் "கலைமாமணி" டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "கலைமாமணி" டி.எம். சௌந்தரராஜனின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

டி.எம். சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "கலைமாமணி" டி.எம். சௌந்தரராஜன் திருவுருவச் சிலையை நேற்று முன்தினம் (16.8.2023) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் . எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் . கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் . எஸ். இரகுபதி, செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் .பி.மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் .சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் . எம். பூமிநாதன், . கோ. தளபதி, துணை மேயர் .டி. நாகராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் . த. மோகன், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, இ.ஆ.ப., . டி.எம். சௌந்தரரராஜன் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாவது நிகழ்வு: இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் சென்றார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் நேற்று (17.8.2023) இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மீனவர்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இன்று(18.8.2023) நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில், அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் , அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி, அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பிடிஆர் இல்லை: ஆனால் இந்த இரண்டு நிகழ்விலும் அமைச்சர் பிடிஆர் கலந்துகொள்ளவில்லை. இதை வைத்து முதல்வர் ஸ்டாலின் நிகழ்வில் பிடிஆர் இல்லை என்ற சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அமைச்சர் பிடிஆர் மதுரையில் தற்போது இல்லை. அவர் நேற்று முதல் நாளே மலேசியா சென்றுவிட்டார். அங்கே நடக்கும் பல்வேறு ஐடி துறை தொடர்பான நிகழ்வுகளில் பிடிஆர் கலந்து கொள்கிறார். பல மீட்டிங்குகளில் இவர் கலந்து கொள்ள உள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அனுமதியுடன்தான் இவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications