அதெல்லாம் தெரிஞ்சா மன உளைச்சல்தான் வரும்! மோடியை உதயநிதி சந்தித்த கணக்கே வேற.. இவ்வளவு நடந்துருக்கா?
சென்னை: கேலோ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை நேரில் அழைத்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடியை நேற்று மாலை சந்தித்து விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு, வருகிறேன் என மோடி சொல்லியிருப்பதாக உதயநிதி தெரிவித்திக்கிறார்.

பிரதமர் மோடியை - உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு பல கருத்து பரிமாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு திரும்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். டெல்லி பயணத்தில் ராகுலை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால், மோடியை சந்தித்து விட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்றால் அதைன் வைத்தே டெல்லி பத்திரிகைகள் குழப்பத்தை உருவாக்கும் என சொல்லப்பட்டதால், டெல்லியிலிருந்த படியே ராகுலை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது.
மோடியை சந்தித்த போதே அதை பற்றி பெரிய அளவில் விவாதங்கள் நடந்தது. பாஜகவுடன் திமுக நேருவிட்டதாக விவாதங்கள் நடந்தது. மோடியை உதயநிதி சந்திக்க திமுக நேரம் கேட்டிருப்பதை திமுக தலைமை தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்கிற கோபம் காங்கிரஸ் தலைமைக்கு இருந்துள்ளது. பேப்பரில் பார்த்துதான் சந்திப்பு விபரமே காங்கிரசுக்கு தெரிந்திருக்கிறது.
அதனால் உதயநிதிக்காக நேரம் கேட்கப்பட்டபோது, நேரம் ஒதுக்கணுமா என்று யோசித்தாராம் ராகுல்காந்தி. இதன் பிறகு சோனியா தான் சந்திக்கச் சொல்லியிருக்கிறார். இதனையடுத்தே உதயநிதியை வரச்சொல்லியிருக்கிறார் ராகுல். சந்திப்பில் அந்த அரசியலையும் உதயநிதியிடம் விவாதிக்கவில்லை ராகுல்காந்தி. பரஸ்பரம் இருவரும் உடல் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.
அவ்வளவே. கூடுதலாக ராகுல் தொடங்கும் யாத்திரையை பற்றி உதயநிதி கேட்க அது பற்றிய விபரங்களை சொல்லி யிருக்கிறார் ராகுல் காந்தி. ஆக, உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் சார்ந்த விசயங்கள், கூட்டணி விசயங்கள் எதையும் பேசாமல் தவிர்த்து விட்டார் ராகுல் காந்தி.
இது ஒருபுறமிருக்க, மோடியை மெனக்கெட்டு உதயநிதி சுற்றலின் சந்தித்தது திமுக சீனியர்களும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ரசிக்கவில்லை. நிதி உதவி கேட்டு நேரிலும் கடிதம் மூலமாகவும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், நிதி தராமல் புறக்கணிக்கிறார் மோடி. மேலும், திமுக அமைச்சர்களுக்கு எதிராக ஐ.டி.யையும், ஈ.டி.யையும் அனுப்பி ரெய்டு நடத்தி திமுகவுக்கு அதிகப்படியான நெருக்கடி தருகிறார் மோடி. அப்படியிருக்கையில், மோடியை அழைத்து விளையாட்டு விழாவை நடத்தனுமா? எதற்காக மோடி நமக்கு? ஸ்டாலினை வைத்து விழாவை துவக்கலாமே? இதையெல்லாம் விட்டுவிட்டு, பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று மோடியே வேண்டுமென அழைப்பது எதற்கு ? என்றெல்லாம் திமுக சீனியர் அமைச்சர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இதனையே, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சிலர் திமுகவின் சீனியர் அமைச்சர் ஒருவரிடம் புலம்பியுள்ளனர். அவரோ, இதே புலம்பல்தான் எங்க கிட்டேயும் இருக்கு. மோடியை உதயநிதி சந்தித்த கணக்கே வேற; அதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்குத்தான் மன உளைச்சல் வரும் என்று சொன்னாராம் அந்த அமைச்சர். மோடி-உதயநிதி சந்திப்பை தொடர்ந்து இப்படிப்பட்ட புலம்பல்கள் களைகட்டுகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications