விஜய்யை விமர்சிக்காமல் தவிர்ப்பது ஏன் தெரியுமா? முதல் முறையாக உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்.. இதுதானா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து மேடைகளில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் ஸ்டாலின், விஜய் பற்றி பேசுவது, விமர்சனம் செய்யாமல் அமைதியாக உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யை விமர்சனம் செய்யாமல் அமைதியாக கடந்து செல்வது ஏன்? என்பது பற்றி முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் உண்மையை உடைத்து பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் 'சன்டிவிக்கு' சிறப்பு பேட்டி வழங்கி உள்ளார்.
இந்த பேட்டியின்போது ஸ்டாலினிடம், ''எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக பேசுகிறீர்கள்? ஆனால் உங்களை விஜய் மிகக்கடுமையாக இந்த தேர்தலில் விமர்சனம் செய்கிறார்? நீங்கள் பதிலே சொல்லாமல் தவிர்க்கிறீர்களே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு ஸ்டாலின், ''எடப்பாடி பழனிச்சாமியை கூட நான் கடுமையாக பேசுவது இல்லை. அவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இதனால் கேள்விகள் கேட்கும்போதோ, சில பிரச்சனைகளை சொல்லும்போதோ, அதற்கு தகுந்த பதிலை தான் சொல்லி கொண்டிருக்கிறேன். நான் கடுமையாக விமர்சனங்கள் செய்வது இல்லை.
அதேபோல் விஜய்யை பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரைக்கும் புதிதாக யாராவது அரசியல் அல்லது அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் திமுகவை விமர்சனம் செய்வது தான் வழக்கமாக உள்ளது. இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. நானும் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று திமுக அதுபற்றி கவலைப்படுவது இல்லை.
ஏனென்றால் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் பலரும் திமுகவால் தான் இந்த வேலை கிடைத்தது. கருணாநிதியால் தான் கிடைத்தது. திமுக மட்டும் தான் உந்து சக்தியாக உள்ளது என்று கூறுகின்றனர். இதனால் யார் வந்தாலும் திமுகவை எதிர்த்து அல்லது திமுகவை விமர்சனம் செய்தால் தான் வளர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தவறான ஒன்று. திமுக ஒரு ஆக்க சக்தி. பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் வந்துள்ளது என்றால் திமுக ஆக்க சக்தியாக இருந்து ஆட்சி புரிந்தது தான்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications