திடீரென ஜெர்மனிக்கு பறந்த ராஜாத்தி அம்மாள்.. கூடவே சென்ற கனிமொழி.. நேற்று இரவு என்ன நடந்தது?
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு சென்றார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள். இவருக்கு செரிமான மண்டலத்தில் கோளாறு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி வயிற்றுவலி பிரச்சனையும் இருந்து வருகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை
தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களாக ராஜாத்தி அம்மாள் அங்கே சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது அங்கேயே தங்கியும், சில சமயம் வீட்டில் இருந்தும் சிகிச்சை பெற்றார். ஆனால் இவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இடையில் கொஞ்சம் குணமடைந்த உடல்நிலை சமீபத்தில் மீண்டும் மோசமாகி இருக்கிறது. உணவு உட்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உணவு
அவ்வப்போது வாந்தி எடுப்பது, சாப்பாடு செரிமானம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரின் உடல்நிலையில் இந்த முறை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி அழைத்து செல்லும்படி இவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனி
இதையடுத்து ராஜாத்தி அம்மாள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு சென்றார். எம்பி கனிமொழியும் ராஜாத்தி அம்மாளுடன் ஜெர்மனி சென்றார். நேற்று இரவு இவர்கள் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர். ஜெர்மனியில் அடுத்த சில நாட்களுக்கு தங்கி ராஜாத்தி அம்மாள் சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. அங்கு அவருக்கு குடல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கனிமொழி
நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி.. அம்மாவின் உடல்நிலை காரணமாக ஜெர்மனி செல்கிறோம். அங்கே அவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்படும் என்று கனிமொழி குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக ராஜாத்தி அம்மாள் திட உணவுகளை உட்கொள்ளாமல் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்தார். பழசாறு, சூப் போன்ற திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்தார். இதையடுத்தே தற்போது ஜெர்மனிக்கு மேல் சிகிச்சைக்கு அவர் சென்றுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications