மக்கள் மன்றத்தினருடன் ரஜினி சந்திப்பு ஏன்?.. போயஸ் கார்டனில் தமிழருவியார்?.. பரபரப்பில் ரசிகர்கள்
சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நாளை சந்திக்கவுள்ள நிலையில் அதன் பின்னணியில் என்ன இருக்கும் என ரசிகர்கள் இப்போதே விவாதிக்க தொடங்கிவிட்டனர்.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்து அந்த எண்ணம் கடந்த ஆண்டுடன் முடிந்து போனது. இதுகுறித்து ரஜினியா மீண்டும் பரிசீலனை செய்தாலொழிய மனமாற்றம் என்பது நிகழாது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற ரஜினிகாந்த் நேற்று முன் தினம் தமிழகம் திரும்பினார்.

அறிவிப்புகள்
இதையடுத்து அவர் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவிப்புகள வெளியாகியுள்ளன. என்னவாக இருக்கும் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதிலும் இன்றைய தினம் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவிமணியன் ரஜினியை சந்திப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேள்வி
இது ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினி எதற்காக நாளை மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார், இன்றைய தினம் ஏன் தமிழருவியாரை சந்திக்கிறார் உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

உண்மை
தமிழருவியார் இன்று ரஜினியை சந்திப்பது உண்மை என்றால் மக்கள் மன்றத்தை அவரிடம் ஒப்படைக்கலாம். இவரிடம் ஒப்படைப்பது குறித்து கருத்து கேட்க நாளை நிர்வாகிகளை ரஜினி சந்திக்கலாம், இல்லாவிட்டால் மக்கள் மன்றத்தை விரிவாக்கம், மன்றத்தில் ஏதேனும் சீர்திருத்தங்களை செய்யலாம். அரசியலுக்குத்தான் ரஜினி வரமாட்டேன் என்றார், எனவே அரசியல் அமைப்பை தொடங்குவது குறித்தும் தமிழருவியாரிடம் பேசலாம்.

மக்கள் மன்றம்
தமிழருவியார் சந்திப்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதால் மக்கள் மன்றத்தினருடன் ரஜினி சந்திப்பு சாதாரண சந்திப்பாக இருக்கலாம். இது போல் பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் அரசியல் எனும் மூடிய புத்தகத்தை ரஜினி திரும்பவும் படிக்க திறக்கமாட்டார் என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications