இவரை கொண்டு வாங்க! எங்கேயோ இருந்தவரை "வரச்சொன்ன" ரோஹித் சர்மா.. இந்திய அணியே மாற போகிறது! ட்விஸ்ட்!
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவரின் வருகை இந்திய அணியில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் மீண்டும் பும்ரா காயம் காரணமாக வெளியேறி உள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அந்த தொடரில் அவர் ஆடவில்லை. அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்கு திரும்பி வந்தார். ஒரு போட்டி மட்டுமே ஆடிய அவர் மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார்.

காயம்
அவரை முதுகில் ஏற்பட்ட தடை பிடிப்பு காயம் காரணமாக அவர் வெளியேறி உள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவருக்கு முதுகில் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. அவரின் பவுலிங் ஆக்சன் காரணமாக முதுகில் காயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவர் தனது பவுலிங் ஆக்சனில் சில மாற்றங்களை செய்தால் காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். என்ன நடந்தாலும் அடுத்த 2 மாதத்திற்கு பும்ராவை பவுலிங்கில் பார்க்க முடியாது.

பும்ரா பவுலிங்
பும்ராவிற்கு மாற்றாக இந்திய அணியில் வர போகும் வீரர் யார் என்ற கேள்வி உள்ளது. அனுபவம், பவுலிங், பவுன்சர், யார்க்கர் என்று அனைத்திலும் கலக்க கூடிய வீரர் ஷமிதான். ஆனால் அவரை ஏனோ பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை. கொரோனாவில் இருந்து அவர் குணமடைந்து விட்டாலும் அவரை ஏனோ இந்திய அணி எடுக்கவில்லை. மாறாக சிராஜை இந்திய அணி எடுத்துள்ளது. சிராஜ் கவுண்டியில் ஆடிக்கொண்டு இருந்தார்.

கவுண்டி
சிராஜ் கவுண்டியில் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார். அங்கே வரிசையாக விக்கெட்டுகளை எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் இந்திய அணியில் தற்போது சிராஜுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் கடந்த 3 வருடமாக ஐபிஎல்லில் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவுட் சைட் ஆப் ஸ்டம்பில் ஸ்லோ பால் போடுவது, யார்க்கர், பவுன்சர் போடுவது என்று நிறைய வெரைட்டிகளை இவர் போட தொடங்கி உள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக ஆடி வருகிறார்;.

சிராஜ்
சிராஜிடம் இருக்கும் சிறப்பு அவர் ஷமி, பும்ரா போல அடிக்கடி காயம் அடைய மாட்டார். அவரின் பவுலிங் காரணமாக பெரிய அளவில் காயம் ஏற்பட்டது இல்லை. கொஞ்சம் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடியவர். பெங்களூர் அணிக்காக கடந்த 3 வருடங்களில் சிறப்பாக டெத் ஓவரும் வீசி இருக்கிறார். இந்த நிலையில்தான் அணிக்குள் அவரின் வருகை முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம்
இந்திய அணியில் அவர் பெரும்பாலும் ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக ஆடும் அணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியின் லுக்கையே இது மாற்றும். ஹர்ஷல் பட்டேல் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவருக்கு பதிலாக சிராஜ் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. தென்னாபிரிக்க தொடரில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் அஷ்வின்,அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங்,தீபக் சாஹர், முகமது. சிராஜ் ஆகியோர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த தொடரில் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டி 20 உலகக் கோப்பை தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications