"தமிழ்நாடு".. டெல்லிக்கு சென்ற சில மணி நேரங்களில்.. விளக்கம் தந்த ஆளுநர் ரவி.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு சென்று இருந்த நிலையில் திடீரென தமிழ்நாடு - தமிழகம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவி பேச்சு காரணமாக தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு என்ற வார்த்தையை விட தமிழகம் என்ற வார்த்தையே பொருத்தமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற சொல்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ஆளுநர் பேச்சு
மதராஸ் என்று இருந்த பெயரை பெரிய போராட்டத்திற்கு பின், மொழிப்போர் தியாகிகளின் மரணத்திற்கு தமிழ்நாடு என்று மாற்றினார்கள். யார் என்ன சொன்னாலும் இப்போதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாட்டின் பெயர் தமிழ்நாடுதான். இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி திடீரென தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, துரதிருஷ்டவசமாக இங்கு தமிழகத்தில் "நாங்கள் திராவிடர்கள்" என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருகிறது. அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாடு நமது பாரதத்தின் ஒரு பகுதி என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள். அதில் தமிழ்நாடு ஒரு இடம் என்பது தெரிந்ததே. தமிழகம் என்று நாம் அழைப்பது மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது, என்று ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

சர்ச்சை
அதோடு தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார். அதோடு கடைசி கட்டத்தில் தமிழ்நாடு என்று வரும் இடங்களில் எல்லாம் இந்த அரசு என்ற வார்த்தையை ஆளுநர் பயன்படுத்தினார்.

ஆளுநர் ரவி
இது பெரிய சர்ச்சையான நிலையில், இதற்கு சட்டசபையிலேயே பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் ஆர். என் ரவி உரைக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதோடு ஆளுநர் உரை நீக்கப்பட்டு அரசு தயாரிக்கப்பட்ட உரை அவையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்தே தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டனர். இதில் ஆளுநருக்கு எதிராக புகார் வைக்கப்பட்டது. முன்னதாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதினார். ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக கோரிக்கையும் வைக்கப்பட்டது.

கோரிக்கை
இதற்காக தமிழ்நாடு எம்பிக்கள் டெல்லி சென்ற மறுநாளே ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை அதிகாரிகளை சந்தித்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பிற்கு மறுநாளே ஆளுநர் ஆர். என் ரவி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை கேட்டார். இதில் இன்னும் உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது ஆளுநர் ஆர். என் ரவி மீண்டும் டெல்லி சென்றுள்ளார். அவர் டெல்லியில் உள்துறை அதிகாரிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு சென்று இருந்த நிலையில் திடீரென தமிழ்நாடு - தமிழகம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

விளக்கம்
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ , அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்." எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம், என்று ஆளுநர் ஆர். என் ரவி விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் ஆர். என் ரவியின் பேச்சுக்கு அரசியல் கடந்து கல்லூரி மாணவர்களும் போராட்டங்கள் நடத்தியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதால், தற்போது இதுகுறித்த சர்ச்சைகளும், பேச்சுக்களும் முடிவுக்கு வந்துள்ளன.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications