மோடி இப்படி செய்த வழக்கமே இல்லையே.. சட்டென ஆளுநர் ரவியை பார்த்தது ஏன்? வாட்ச் செய்த திமுக.. குழப்பம்
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவி சந்தித்து பேசியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் முக்கியமான சில விவாதங்களை இந்த விவகாரம் கிளறி விட்டு உள்ளது.
கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்ற நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று புகார்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இங்கே விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள்.
அடுத்த சம்பவம்: இந்த சம்பவத்தின் ஈரம் காயும் முன் தற்போது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். இவரின் கொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தேசிய அளவில் தலித் அமைப்புகள் இடையே கடுமையான எதிர்ப்புகளை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
ஆளுநர் ரவி டெல்லி பயணம்; இப்படி அதிகாரிகள் மாற்றத்திற்கு இடையே ஆளுநர் ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். 5 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி பயணம் செய்தார். இதில் கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்ற நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவி சந்தித்து பேசியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் பொதுவாக பிரதமர் மோடி மாநில ஆளுநர்களை சந்திக்க மாட்டார். மாநில ஆளுநர்கள் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பேசுவார்.
ஆனால் இந்த முறை மோடியே ஆளுநர் ரவியிடம் பேசி உள்ளார். இதனால் தமிழ்நாடு அரசியலில் முக்கியமான சில விவாதங்களை இந்த விவகாரம் கிளறி விட்டு உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு இதனால் சிக்கல் ஏற்பட போகிறதா அல்லது தனது பதவி நீட்டிப்பு தொடர்பாக ஆளுநர் ரவி போய் இருக்கிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆளுநர் ரவியின் இந்த பயணத்திற்கு பின் நடக்க போகும் சம்பவங்களை திமுக கவனமாக உற்று நோக்கி வருகிறதாம்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications