ஆதவ் அர்ஜுனா இருக்கிறார்.. ஜான் இருக்கிறார்.. இப்போ பிகே வேறயா? விஜய் போட்டு குழப்புறாரே! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதவ் அர்ஜுனா விஜயுடன் கரம் கோர்த்து உள்ளார். ஏற்கனவே கட்சியின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் பிரசாந்த் கிஷோர் உடன் திடீரென சந்திப்பு நடந்திருப்பது விவாதங்களை எழுப்பி உள்ளது.

விஜய்க்கு பின்னணியில் இருந்தது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.

Edappadi Palaniswami aadhav arjuna

ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இதை எல்லாம் செதுக்கியது அவர்தான் என்று கூறப்படுகிறது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா இருக்கிறார்:

சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். விஜய்க்கும் ஆதவ்வுக்கும் பொதுவான நண்பர் ஒருவர், விஜய்யை சமீபத்தில் சந்தித்தார். ஆதவ் பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள் ? என நண்பர் கேட்க, அவர்தான் அதிமுகவில் சேர்கிறாராமே என விஜய் சொல்லியிருக்கிறார். அதெல்லாம் பொய், உங்களின் அழைப்பிற்காக ஆதவ் காத்திருக்கிறார் என்று சொல்லியதும், உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என விஜய் சொன்னதன் அடிப்படையில், விஜய்-ஆதவ் சந்திப்பு நடந்துள்ளது.

அந்த சந்திப்பு 1 மணி நேரம் நீடித்தது. அதில், த.வெ.க.குறித்து தாங்கள் எடுத்த சர்வே ரிசல்ட் பற்றி விஜய்யிடம் விரிவாக விளக்கியிருக்கிறார். அப்போதுதான் இதுவரையில் தனக்குச் சொல்லப்பட்ட பல தகவல்கள் பொய்யானவை என விஜய்க்கு தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், திமுகவுக்கு எதிராகவும் விஜய்யிடன் விளக்கியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதன் பிறகே, ஆதவ் அர்ஜுனாவுடம் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ள விஜய் முடிவெடுத்துள்ளார்" என்றெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் இருக்கிறதாம்.

திட்டம் என்ன?:

த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே நேற்று அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.

அப்போ பிரசாந்த் கிஷோர்:

இப்படிப்பட்ட நிலையில்தான் பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் விஜய். பிகே இப்போது ஐபேக்கில் இல்லை. இதனால் அவர் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக வர மாட்டார். ஐபேக்கும் வராது. (ஐபேக் திமுகவிடம் மீண்டும் செல்வதாக பேச்சு உள்ளது)

1. இதனால் பிகே விஜய்க்கு வேலை செய்ய மாட்டார். மாறாக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு உதவலாம்.

2. மக்கள் நீதி மய்யம் உருவாக்கப்பட்ட போது அதற்கு பிகே பணிகளை செய்துள்ளார். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படையை உருவாக்க இவரை அழைக்கலாம்.

3. விஜய் மாநிலம் முழுக்க யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதற்கான திட்டங்களை வகுக்கலாம்.

4. அல்லது தனிப்பட்ட வகையில் விஜய்க்கு அரசியல் ட்ரெயினிங் தரலாம். குஜராத் முதல்வராக இருந்து பிரதமர் பதவிக்கு காய் நகர்த்திய போது பிகே மோடிக்கும் இதே பயிற்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+