சித்தார்த்தை தொந்தரவு செய்த கன்னட அமைப்பினர்.. நடிகர் ரஜினிகாந்த் பேசாதது ஏன்? வன்னி அரசு கேள்வி
சென்னை: பெங்களூரில் நடிகர் சித்தார்த்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் புகுந்து கன்னட அமைப்புகள் கலாட்டா செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ரஜினிகாந்த் பேசாதது ஏன் என வன்னி அரசு கேள்வியெழுப்பியுள்ளார்.
காவிரி நீரை கர்நாடக மாநிலத்திடமிருந்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் முட்டி மோதி வருகிறது. கேட்கும் நீரை கொடுக்காமல் பல காரணங்களை சொல்லி தவிர்த்து வரும் கர்நாடக அரசு இந்த முறை போதிய மழை இல்லை என்கிற சாக்கு போக்கை கூறியுள்ளது. இருப்பினும் தமிழக அரசு உரிய நீரை பெறுவதில் விடாப்பிடியாக இருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஏற்கெனவே மாண்டியாவிலும், பெங்களூரிலும் பந்த் போராட்டத்தை நடத்திய இந்த அமைப்புகள், இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று 'சித்தா' படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூரில் நடைபெற்றது. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களை இயக்கிய அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படி இருக்கையில் செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.
"காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு போகிறது. நீங்கள் இப்போது தமிழ்ப்படம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போ இதெல்லாம் அவசியமா? வீதிக்கு வந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று போராடுங்கள் வாருங்கள்" என்று ஆவேசமாக கூச்சலிட்டனர். இதனையடுத்து மேடையிலிருந்து சித்தார்த் கீழிறங்கி, அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது தொடர்பாக X சோஷியல் மீடியா தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "பல ஆண்டுகாளாக பழமையான இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக, கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு நடிகர் இவ்வாறான நெருக்கடியை சந்தித்தபோது ரஜினிகாந்த் ஏன் மவுனம் காக்கிறார்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது, "காவிரி பிரச்சனையை வைத்துக்கொண்டு நடிகர் சித்தார்த்தின் ஊடகவியலாளர் சந்திப்பை ரகளை செய்து நிறுத்தியுள்ளது கன்னட இனவெறி அமைப்பு. இப்போக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டுமே துணிச்சலுடன் கண்டித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு திரைத்துறையினர் இதுவரை கண்டிக்க முன் வரவில்லை. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கள்ள மவுனம் காக்கிறார். உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களா? அல்லது பிரகாஷ்ராஜ் அவர்களா?" என்று x சோஷியல் மீடியா தளத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் ரஜினியின் பெயர் பலமுறை அடிப்பட்டிருக்கிறது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், "ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது. காவிரி குறித்த அவரது நிலைப்பாட்டை அறிய விரும்புகிறோம். ரஜினிகாந்த் அவர்களே நீங்கள் கர்நாடகாவுக்காக நிற்பிற்களா? அல்லது தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா? என்பதை தெளிவுபடுத்துங்கள்" என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications