என்ன இது.. பிரேமலதா திடீர்ன்னு இப்படி சொல்கிறார்.. ஒரேயடியாக இறங்கி வந்தது ஏன்? பின்னணியில் சசிகலாவா
சென்னை: ஒரு காலத்தில் மிகப்பெரிய மாற்று என்று நம்பப்பட்ட.. திமுக, அதிமுகவிற்கு அடுத்து இவங்கதான் என்று நம்பப்பட்ட தேமுதிக நேற்று முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. நேற்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா சொன்ன ஒரு விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெற்று இருந்தது. ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால் அதிமுகவுடனான நட்பை பிரேக் அப் செய்துவிட்டு.. அமமுகவிற்கு பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து அவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டது.
இதில் அதிமுகவிடம் 18 தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் தேமுதிக கேட்டுள்ளது. ஆனால் அதிமுகவோ வெறும் 13 தொகுதிகள்தான் கொடுப்போம், ராஜ்ய சபா சீட் எல்லாம் கொடுக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டது.

கூட்டணி
இதை ஏற்றுக்கொள்ள மறுத்து அதிமுக கூட்டணியில் இருந்தே தேமுதிக வெளியேறிவிட்டது. தற்போது அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. மொத்தமாக அமமுக கூட்டணியில் 60 இடங்களில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த கூட்டணி குறித்து நேற்று பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

பேட்டி
நேற்று பேசிய பிரேமலதா அதிமுக தலைவர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார். அதிமுக எங்களை மதிக்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை வேண்டும் என்றே தாமதம் செய்தது. பாமகவிற்கு கொடுத்த மதிப்பை எங்களுக்கு கொடுக்கவில்லை. அண்ணன் எடப்பாடி பக்குவம் இல்லாமல் செயல்படுகிறார் என்றெல்லாம் பிரேமலதா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார்.

கோபம்
அதிமுக மீது தேமுதிக கோபத்தில் இருக்கிறது என்பது பிரேமலதாவின் இந்த பேட்டி மூலமே தெரிந்தது. இந்த நிலையில் இன்னொரு டிவிஸ்ட்டாக நேற்று.. டிடிவி தினகரன்தான் அமமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்றும் பிரேமலதா அறிவித்தார். தேமுதிகவில் விஜயகாந்த உடல்நிலை காரணமாக போட்டியிடாத நிலையில் தினகரனை முதல்வர் வேட்பாளராக பிரேமலதா ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரேமலதா
பொதுவாக தேமுதிக இப்படி எல்லாம் கூட்டணி கட்சிகளை அனுசரித்து போகாது.. முக்கியமாக தினகரனை இப்படி முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. ஆனாலும் அனைத்தையும் மீறி தினகரனை பிரேமலதா முதல்வர் வேட்பளராக ஏற்றுக்கொண்டுள்ளார். அமமுக கூட்டணி கண்டிப்பாக வாக்குகளை பிரிக்கும் என்றாலும் ஆட்சி அமைக்க எல்லாம் வாய்ப்பே இல்லை.

வாய்ப்பு இல்லை
அப்படி இருக்கும் போது அமமுக கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் இப்போது அவசியமே இல்லை. முதல்வர் வேட்பாளர் இல்லாமலே தேர்தலை சந்திக்கலாம். ஆனாலும் பிரேமலதா இறங்கி வந்து தினகரனுக்கு ஆதரவாக, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார். தேமுதிகவின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? ஏன் இப்படி பிரேமலதா இறங்கி வந்துள்ளார் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

சசிகலா
சசிகலாவுக்கு தொடக்கத்தில் இருந்தே பிரேமலதா ஆதரவாக இருந்தார். சசிகலா மீண்டும் அதிமுகவில் எழுச்சி பெறுவார் என்று தேமுதிக நம்புகிறது. சசிகலா அதிமுகவில் எழுச்சி பெற்றால், அங்கு தேமுதிகவுக்கு மதிப்பு கிடைக்கும் என்று பிரேமலதா நம்புகிறாராம்.

இப்போதே
இதனால் சசிகலா மனதை குளிர வைக்கும் வகையில் தினகரனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பிரேமலதா ஒப்புக்கொண்டார் என்று கூறுகிறார்கள். இப்போதே சசிகலா தரப்பிடம் தேமுதிக சீட் பிடித்து வைத்துக்கொள்கிறது. சசிகலாவிற்கு பெரிய அரசியல் எதிர்காலம் இருப்பதாக பிரேமலதா நம்புகிறார்.

வேறு கருத்து
இன்னொரு பக்கம் தற்போது விஜயகாந்த் உடல்நலமுடன் இல்லை. இதனால் தேர்தலை சந்திக்க கூட்டணிக்கு ஒரு முகம் வேண்டும். கூட்டணியில் அமமுகதான் அதிக இடங்களில் போட்டியிடுகிறது. இதனால் அவர்களையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து விடலாம் என்று தேமுதிக இறங்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள் .
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications