போன முறை இப்படி இல்லையே.. பாஜகவை விடுங்க.. அதிமுக, திமுக ஒரே மாதிரி எடுத்த முடிவு! என்னவா இருக்கும்?
சென்னை; லோக்சபா தேர்தல் 2024 தமிழ்நாட்டில் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசியலில் முக்கியமான ஒரு சம்பவம் நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் பரபரப்பாக நடந்து முடிந்துவிட்டது. 40 தொகுதிகளிலும் எந்த அளவிற்கு இல்லாத அமைதியுடன் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதோடு தமிழ்நாட்டில் எந்த பூத்திலும் மறுதேர்தல் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு: மாநிலத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.
கடந்த முறை எப்படி: லோக்சபா தேர்தல் 2024 தமிழ்நாட்டில் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசியலில் முக்கியமான ஒரு சம்பவம் நடந்து வருகிறது. கடந்த முறை தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த இடங்களில் எல்லாம் வெளியே கட்சியினர் காவலுக்கு நின்றனர்.
திமுக, அதிமுக, பாமக, விசிகவினர் காவலுக்கு நின்றனர். திமுகவினர்தான் அதிகமாக அப்போது காவலுக்கு நின்றனர். ஆனால் இந்த முறை அப்படி காவலுக்கு நிற்கும் வழக்கம் இல்லை. இந்த முறை அப்படி யாரும் எங்கும் காவலுக்கு நிற்கவே இல்லை.
கடந்த முறை திமுக ஆளும் கட்சி இல்லை. போலீசை திமுக நம்ப முடியவில்லை. இதனால் திமுக சார்பாக காவலுக்கு நின்றனர். ஆனால் இப்போது திமுக ஆளும் கட்சி. போலீஸ் பலம் - அதிகாரம் பலம் உள்ளது. வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு பற்றி அவர்களுக்க்கு தெரியும். இதனால் அவர்கள் தனியாக கட்சி ரீதியாக பாதுகாப்பு தர வேண்டியது இல்லை.
இதனால் திமுக பாதுகாப்பு தரவில்லை. பாஜகவிற்கு இன்னொரு பக்கம் வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதியாக வேலூர் உள்ளிட்ட 2 -3 தொகுதிகள் மட்டுமே சொல்லப்டுகின்றன. ஆனால் அந்த தொகுதிகள் கூட வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளில் கூட பாஜக பாதுகாப்பிற்கு ஆள் போடவில்லை. பூத் கமிட்டிக்கு கூட ஆள் போட முடியாத நிலையில்தான் பாஜகவிற்கு பாதுகாப்பிற்கும் ஆள் போட முடியாத சூழல் உள்ளது.
இதெல்லாம் போக அதிமுகவும் இது லோக்சபா தேர்தல் என்பதால் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்த தேர்தலில் பெரிதாக அவர்கள் பண பலத்தையும் இறக்கவில்லை. ஆள் பலத்தையும் இறக்கவில்லை. தேர்தல் முடிந்தும் பெரிதாக வாக்கு பெட்டிகளை காப்பதில் அதிமுகவினர் ஆர்வம் காட்டவில்லை. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் இது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications